Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி -மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து அளிக்க தயார்

வீடு தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளதாக மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்று. எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தாதவர்கள் எல்லாம் வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதத்திற்குள் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றியடைந்துள்ளன. 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் பட்டியலில் 65 லட்சம் பேர் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக தீபாவளி விடுமுறைக்கு பின் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் 2ஆம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் பட்டியலில் 65 லட்சம் பேர் உள்ளனர்.

அதிகளவில் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழ்நாடுதான். தமிழகம் முழுவதும் நவம்பர் 14ம் தேதியன்று 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.தமிழகத்தில் உருமாறிய டெல்டா வகை வைரஸின் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி முகாம் வெற்றி

தடுப்பூசி முகாம் வெற்றி

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தடுப்பூசி போடும் பணிகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகளின் வாயிலாக சுமார் 2,800 இடங்களில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்பிறகு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை தொடங்கி இதுவரை 7 தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டு அது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.

தடுப்பூசி போடும் பணி

தடுப்பூசி போடும் பணி

கடந்த 2ஆம் தேதி மதுராந்தகம் அருகே சித்தாமூர் பக்கத்தில் உள்ள நல்லம்பாளையம் கிராமத்தில் வீடு தேடி நடமாடும் வாகனங்களின் மூலம் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் பணி இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டது. மேலும் விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கிராமங்கள் தோறும் வாகனங்களில் சென்று தடுப்பூசி போடும் பணியினை கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கினார்கள்.

அனைவருக்கும் தடுப்பூசி

அனைவருக்கும் தடுப்பூசி

தடுப்பூசி போடும் பணியில் ஒருவரைகூட தவற விட்டுவிடக்கூடாது என்ற வகையில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதற்கு ஏற்ப கடந்த 2ஆம்தேதி நல்லாம்பாளையம் கிராமத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அதற்கு மறுநாள் பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு காணொலி கூட்டத்தில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை அவரும் வலியுறுத்தினார்.

சென்னையில் பட்டியல் தயார்

சென்னையில் பட்டியல் தயார்

தமிழகத்தில் 2 வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 70 ஆயிரத்து395 பேர். கோவேக்சின் 2 வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 9 ஆயிரத்து 903 பேரும், கோவிஷீல்டு 2வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 60 ஆயிரத்து 392 பேரும் ஆவர். சென்னை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி ஆணையர் இன்று சென்னை பல்வேறு பகுதிகளில் யாருக்கெல்லாம் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டும், யாருக்கெல்லாம் முதல் தடுப்பூசி போட வேண்டும் என்ற பட்டியலை தயாரித்து இருக்கிறார்.

தடுப்பூசி போடுவதன் அவசியம்

தடுப்பூசி போடுவதன் அவசியம்

நொச்சிக்குப்பம் பகுதியில் 536 வீடுகள் இருக்கிறது. இதில் 24 வீடுகள் கதவு அடைக்கப்பட்டு இருக்கிறது. 2956 பேர் இருக்கிறார்கள். 771 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. 557 பேருக்கு 2வது தவணை போடப்பட்டு இருக்கிறது. இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 998. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியினை நாங்கள் நொச்சிக்குப்பத்தில் தொடங்கி வைத்து இருக்கிறோம். அலுவலர்கள் வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணியினை நிறைவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பொறுமையாக எடுத்து பேசி தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை அலுவலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Recommended Video

    தீபாவளி தொடர் விடுமுறையால் மெகா தடுப்பூசி முகாம் ரத்து.. மா.சு தகவல்..!
    கொரோனா அச்சுறுத்தல்

    கொரோனா அச்சுறுத்தல்

    உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் தினமும் 30 ஆயிரத்தை கடந்த அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நேற்று 75 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ரஷ்யாவில் 40 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இங்கிலாந்தில் 36 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. சிங்கப்பூரில் 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. பிரான்சில் 9 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஜெர்மனியில் 30 ஆயிரம், துருக்கியில் 26 ஆயிரம் என உலக அளவில் பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக மிக அவசியமான ஒன்று. எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது.

    100 சதவிகித தடுப்பூசி

    100 சதவிகித தடுப்பூசி

    தினந்தோறும் வார நாட்களில் இந்த பணி நடைபெறும். வருகிற 14ஆம் தேதி 8வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தாராளமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 100 சதவீத வாக்காளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். அதனால்தான் வாரங்கள் தோறும் வீடுகளில் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

    மக்களுக்கு மருத்துவம்

    மக்களுக்கு மருத்துவம்

    ஆகஸ்டு 5ஆம் தேதி தமிழக முதல்வர் கிருஷ்ணகிரியில் "மக்களை தேடி மருத்துவம்" என்று ஒரு திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் இதுவரை 32 லட்சத்து 36 ஆயிரத்து 622 பேர் பயன் அடைந்துள்ளனர். அந்த திட்டத்தின்படி பயனாளிகளை கண்டறிவதற்கு வீடு தோறும் தேடி சென்று தடுப்பூசி போடும் பணி ஒரு பயன் உள்ள திட்டமாக அமையும். பல்வேறு வீடுகளில் கேட்டு வருகிற போது ஒரு பெண் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது என்று கூறினார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து அளிக்க தயாராக உள்ளார்.

    புதிய கொரோனா பாதிப்பு இல்லை

    புதிய கொரோனா பாதிப்பு இல்லை

    வீடு தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சொல்லி உள்ளோம். தவறு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்பதையும் கண்டறிய சொல்லி இருக்கிறோம். தமிழகத்தில் உருமாறிய டெல்டா வகை வைரஸின் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+