சென்னையில் கொரோனா தீவிரம்.. ஒரே நாளில் 27 பேர் பலி.. மொத்த பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.. ஷாக்
சென்னை: சென்னையில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட பெரு நகரங்களில் சென்னை முக்கியமான இடத்தில் உள்ளது. சென்னையில் கடந்த மார்ச் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் ஏப்ரல் இறுதியில் கோயம்பேடு கிளஸ்டர் காரணமாக கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது.
தினமும் 100+ கேஸ்கள் வந்த நிலையில் போக போக தினசரி கேஸ்கள் 3000ஐ தொட்டது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் சென்னையில் தினசரி கேஸ்கள் உயர்ந்தது.

இப்போது குறைந்துள்ளது
ஆனால் சென்னையில் தற்போது கொஞ்சம் கொரோனா கேஸ்கள் கட்டுப்பட தொடங்கி உள்ளது . தினசரி கேஸ்கள் 3000த்தில் இருந்து குறைந்து ஆயிரமாக மாறியுள்ளது. சென்னையில் தற்போது தினசரி கேஸ்கள் 1000-1100க்கு இடையே தினமும் வருகிறது. மொத்தமாக கேஸ்கள் குறையவில்லை. ஆனாலும் கடுமையான கட்டுப்பாடு காரணமாக கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

மொத்த பாதிப்பு
சென்னையில் இன்று மட்டும் 1074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 100877 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளது.

எத்தனை நோயாளிகள்
சென்னையில் இன்று அதிகமாக 27 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் பலி எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது வரை 86301 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தமாக 2541 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

வேறு நகரங்கள்
சென்னையுடன் ஒப்பிடும் போது மற்ற பெருநகரங்களிலும் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது.
- மும்பை -114268 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பெங்களூர் - 55544 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ஹைதராபாத் - 60000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications