சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்.. பதட்டப்பட்டால் அப்படியே உயிர் போயிடும்.. மனஉளைச்சல் + ஹார்மோன் அளவு.. கொரோனாவின் அடுத்த பகீர்

கொரோனா நோயாளிக்கு ஸ்ட்ரெஸ் அதிகமானால் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: இன்னொரு குண்டை தூக்கி போட்டுள்ளது ஒரு இங்கிலாந்து ஆய்வு.. கொரோனா பாதிப்புடன், மன உளைச்சலும் அதிகமாகிவிட்டாலோ, பதட்டப்பட்டாலோ அப்படியே உயிர்போய்விடுமாம்.. அதை பற்றின செய்தி தான் இது!

இந்த கொரோனா உலகத்துக்கு புதுசு.. இதை பற்றி இன்னும் ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை.. மருந்துதான் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பார்த்தால், இவைகள் வைரஸ் அறிகுறி, இவர்களைதான் இந்த வைரஸ் பாதிக்கும் என்று ஒரு முடிவுக்கே வரமுடியவில்லை.

coronavirus: higher levels of stress hormone to covid deaths

நாளுக்கு நாள் இந்த வைரஸ் பற்றின ஆராய்ச்சி பீதியை எகிற வைத்து வருகிறது. அதன்படி இப்போதும் ஒரு தகவலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தின் லண்டனில் ஒரு ஆய்வு நடந்துள்ளது.

"தி லான்செட் டயாபெட்ஸ் அன்ட் எண்டோகிரைனாலஜி" என்ற மெடிக்கல் புத்தகம் ஒன்றில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டும் உள்ளது. அதன்படி, "ஒருவருக்கு தொற்று தீவிரமாக இருந்தால், அதனை ரத்தத்தில் உள்ள கார்டிசால் ஹார்மோனை கொண்டு நம்மால் தீர்மானிக்க முடியும் என்கிறார்கள்.. ஒருவேளை இவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்றாலும் அதனை அடையாளம் காணவும் இந்த கார்டிசால் அளவை உபயோகிக்கலாம் என்கிறார்கள்.

கொரோனா: அதிதீவிரமாக பரவுகிறது- புதிய, அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு கொரோனா: அதிதீவிரமாக பரவுகிறது- புதிய, அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு

இந்த கார்டிசார் என்பது என்ன? நமது இதயத்தின் செயல்பாடு, வளர்சிதை மாற்றங்களின்போது ஏற்படும் ஸ்ட்ரெஸ் அதாவது மன உளைச்சலை பொறுத்து அந்த நேரத்தில் உடலில் சுரப்பது தான் கார்டிசால்.. ஒருவர் திடகாத்திரத்துடன், நிதானமாக, இயல்பாக, ஃப்ரீயாக இருக்கும்போது கார்டிசால் அளவு 100 - 200 என்எம்/எல் என்ற அளவில் இருக்கும்.. தூங்கும்போது இது ஜீரோவாகவும் இருக்கும். இதில் இருந்து நம்மை பாதுகாப்பதும்கூட நம் உடலிலேயே உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான்.

ஒருவேளை உடம்பு சரியில்லாமல் போய்விட்டால், அந்த நோயாளியிடம் கார்டிசால் அளவு கூடினாலோ, குறைந்தலோ ஆபத்துதான்... அதன்படி 535 கொரோனா நோயாளிகளுக்கு இந்த டெஸ்ட்டினை ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.. இவர்களில் 403 பேருக்கு கார்டிசால் அளவு அளவுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதான் பிரச்சனையே.. இந்த கார்டிசால் அளவு 744 மற்றும் அதற்கும் கீழே கொரோனா நோயாளிகளிடம் இருந்தால், அந்த நோயாளி ஆயுள் மிக மிக குறைவுதான்.. அதாவது 36 நாட்கள்தான் அவர் உயிருடன் இருப்பார்.. இதே கார்டிசால் அளவு 744க்கு மேல் இருந்தால் மிஞ்சிபோனால் 15 நாட்கள்தான் உயிருடன் இருப்பார். அந்த அளவுக்கு உடம்பு மோசமாகிவிடும்.

அதனால் அந்த நோயாளி அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் கார்டிசால் எவ்வளவு இருக்கிறது என்பதை உடனே டெஸ்ட் செய்ய வேண்டும்.. இந்த கார்டிசால் அளவை கொண்டுதான் ஒரு கொரோனா நோயாளியின் ஆயுளை தீர்மானிக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.. ஆக மொத்தம் கொரோனா நோயாளிகள் டென்ஷன் ஆக கூடாது, உடனே இந்த கார்டிசால் அளவு பார்த்து கொள்ளப்பட வேண்டும், அதிகமான ஸ்ட்ரெஸ், அல்லது பதட்டப்பட்டால் அப்படியே உயிர் போயிடும் என்பதே அந்த ஆய்வின் முடிவு!

Recommended Video

    கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    இந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.. இது சரியா என்பதை உறுதி செய்ய இன்னொரு ஆய்வு தேவைப்படும் போல... அதுவரைக்கும் கொரோனா வந்தாலும் டென்ஷன் ஆகாமல் நாம் இருக்க வேண்டியதுதான் ஒரே வழி!

    English summary
    coronavirus: higher levels of stress hormone to covid deaths
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X