சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா ஆட்டம்.. இந்தியாவில் தினமும் மோசமாகும் "ரெக்கார்ட்".. இந்த 5 விஷயம் ரொம்ப முக்கியம்.. கவனம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் மிக அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகின்றன. உலகில் இருக்கும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மிக அதிக அளவில் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகின்றன. தினசரி கேஸ்களில் அமெரிக்கா முதல் இடத்தில் இருந்த நிலையில் அமெரிக்காவை முந்தி இந்தியா கடந்த மூன்று நாட்களாக முதலிடத்தில் உள்ளது .

கடந்த வருடம் மே, ஜூன் மாதங்களில் இந்தியாவில் தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகின. தற்போதும் அதேபோல் தினமும் 80 ஆயிரம் கேஸ்கள் பதிவாகி தினமும் இந்தியா ரெக்கார்ட் படைத்து வருகிறது.

 கடந்த மூன்று நாட்கள்

கடந்த மூன்று நாட்கள்

அதிலும் கடந்த மூன்று நாட்கள் மிகவும் மோசம். கடந்த மூன்று நாட்களில் தினமும் 89 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது. அதிலும் நேற்று மிக அதிகமாக 92,998 கேஸ்கள் பதிவாகி உள்ளது . இந்த வருடத்தில் உலகிலேயே ஒரே நாளில் பதிவான அதிக கேஸ் இதுதான். இந்தியாவில் அந்த அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

ஏற்கவில்லை

ஏற்கவில்லை

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வந்துவிட்டதாக அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் இரண்டாம் அலைக்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகின்றன. கடந்த வருடம் கொரோனா ஏற்படாத பலருக்கும் இந்த முறை கொரோனா ஏற்பட்டு வருகிறது. எங்கோ ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் நமக்கு தெரிந்து பலருக்கும், நெருங்கிய சொந்தங்களுக்கும் கூட கொரோனா ஏற்பட தொடங்கி உள்ளது.

இரண்டாம்

இரண்டாம்

இதன் மூலம் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவது உறுதியாகி விட்டது. இரண்டாம் அலை தாக்கும் நாடுகளில் மிக மோசமான இடத்தை இந்தியா அடைந்துவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும் தேர்தல் காலம் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. இந்தியாவில் தற்போது 12,485,509 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி

பலி

இதுவரை இந்தியாவில் 164,655 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.11,629,289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 49497 கேஸ்கள் பதிவாகி உள்ளது. 29,53,523 பேர் அங்கு இதுவரை கொரோனா காரன்மமாக பாதிக்கப்பட்டுள்ளனர் . தமிழகத்தில் தினசரி கேஸ்கள் 3500+ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 896226 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் .

பாதிப்பு

பாதிப்பு

இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உடனடியாக சில அதிரடி அறிவிப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி

1. கொரோனா அதிகரிக்கும் மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடு. முழு லாக்டவுன் இல்லை என்றாலும் கூடுதல் கட்டுப்பாடு.

2. கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து, கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா ன்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

3. வேக்சின் 45+ வயதுக்கு மேற்பட்டோருக்கு கொடுப்பதை மாற்றிவிட்டு 18+ உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .

4. மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டும்.

 கடைசி

கடைசி

இது போக மிக முக்கியமாக ஐந்தாவதாக, அமெரிக்காவில் தற்போது வேக்சின் அளித்து வரும் ஃபேசிபர், ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அமெரிக்காவில் ஜூன் இறுதியில் மொத்தமாக கொரோனா வேக்சின் போடப்பட்டுவிடும் . இதனால் அந்த நிறுவனங்கள் உடன் இந்தியா உடனே ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

இரண்டு வேக்சின்

இரண்டு வேக்சின்

இரண்டு வேக்சினை மட்டும் நம்பி இருக்கலாம் கூடுதல் வேக்சின்களை வாங்கி வேகமாக மக்களுக்கு செலுத்த வேண்டும். வேக்சினை தவிர இரண்டாம் அலையை கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை. இதனால் மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது மட்டுமே அதிகரிக்கும் கொரோனா கேஸ்களை கட்டுப்படுத்த முடியும்.

English summary
Coronavirus in India: New record every day, Central has to push some rules to avoid the surge to another peak.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X