சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க நெகட்டிவா இருந்தாலும்.. இப்படி எல்லாம் கூட கொரோனா வரும்.. எச்சரிக்கும் பயோகான் நிறுவனர்!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் கூட்டம் விமான நிலையங்களில் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பிரபல மருந்து நிறுவனமான பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil

    ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு உலகம் முழுக்க புதிய பயண கட்டுப்பாடு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவிலும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதோடு ஏற்கனவே கொரோனா பரவிய ரிஸ்க் நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    9,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 125 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை 9,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 125 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை

    புதிய விதி

    புதிய விதி

    புதிய விதிப்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 36 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து. ஜிம்பாபே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வரும் நபர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். 14 நாட்களுக்கு முன்பு வரை அவர்கள் பயணித்த நாடுகளின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    கூட்டம்

    கூட்டம்

    இந்த நிலையில் புதிய பயண கட்டுப்பாடுகள் காரணமாக விமான நிலையங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரையும் சோதனை செய்து அனுப்புவதால் மிகப்பெரிய க்யூ நிற்க வைக்கப்படுகிறது. அதிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மாதிரிகளை கொரோனா சோதனைக்காக எடுக்க வேண்டும். இதற்காகவும் மிக நீண்ட க்யூ நிற்க வைக்கப்படுகிறது.

    வரிசை நிற்கிறது

    வரிசை நிற்கிறது

    ஒவ்வொருவருக்கும் மாதிரிகளை எடுத்து, அதை சோதனைக்கு அனுப்பவும் நேரம் எடுக்கிறது. ஒவ்வொருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சான்றிதழ்களை சோதனை செய்து அனுப்புவதற்கு நீண்ட நேரம் எடுப்பதால் விமான நிலையங்களில் கடும் கூட்டம் நிலவி வருகிறது.

    கடும் கூட்டம்

    கடும் கூட்டம்

    மக்கள் கூட்டம் விமான நிலையங்களில் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பிரபல மருந்து நிறுவனமான பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையை, ஓமிக்ரான் காரணமாக புதிய விதிகள் கொண்டு வரப்பட்ட நிலையில் முதல் நாளே விமான நிலையங்களில் பெரிய அளவில் கூட்டம் காணப்படுகிறது. 6 மணி நேரம் வரை சோதனைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    இப்படி இருந்தால் நீங்கள் நெகட்டிவாக இருந்தாலும் உங்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது. கொரோனா இல்லாமல் நீங்கள் அங்கு போய் நின்றால் கூட கூட்டத்தில் இருப்பவர்களிடம் இருந்து உங்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய கொரோனா விதிகளால் விமான நிலையங்களில் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது.

    நிர்வாகம் மோசம்

    நிர்வாகம் மோசம்

    மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இன்றி சோதனைகள் செய்யப்படுகிறது. இதனால் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா தனது ட்விட்டில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Coronavirus Omicron: Huge crowd in Airports may infect you even if your negative says Biocon founder.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X