சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு சோதனை மையங்களில் கொரோனா டெஸ்ட்.. முழுக்க முழுக்க இலவசம்.. தனியாருக்கும் கட்டுப்பாடு வருகிறது

இந்தியாவில் அரசு கொரோனா சோதனை மையங்களில் இனி முழுக்க முழுக்க கொரோனா சோதனை இலவசமாக செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் அரசு சோதனை மையங்களில் இனி முழுக்க முழுக்க கொரோனா சோதனை இலவசமாக செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    TN CM Edappadi Palanisamy speech | முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

    இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா சோதனை மிகவும் மெதுவாக செய்யப்படுவதாக புகார் உள்ளது. இதற்கு காரணம், இந்தியாவில் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் கொரோனா சோதனை மையங்கள் உள்ளது.

    தாமதம்

    தாமதம்

    இங்கு சோதனை செய்து முடிவுகள் வெளியாக இரண்டு நாட்களுக்கும் மேல் ஆகிறது. இதனால் தனியாருக்கும் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா சோதனைக்கு மொத்தம் 12 தனியார் சோதனை மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்தியா முழுக்க 15 ஆயிரம் இடங்களில் ரத்தம் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    எந்த மாநிலங்கள்

    எந்த மாநிலங்கள்

    இந்தியாவில் மகாராஷ்டிராவில் ஐந்து, ஹரியானாவில் இரண்டு, தமிழகத்தில் இரண்டு, டெல்லி, குஜராத், கர்நாடகாவில் ஒரு தனியார் நிறுவனங்களில் கொரோனா சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தவிர இந்தியா முழுக்க உள்ள அரசு சோதனை மையங்கள் அனைத்திலும் கொரோனா சோதனை இலவசம் ஆக்கப்பட்டு இருக்கிறது.

    எவ்வளவு பணம்

    எவ்வளவு பணம்

    ஆம் முதலில் அரசு சோதனை மையங்களில் கொரோனா சோதனை செய்ய கட்டணம் 4500 ரூபாய் என்று இருந்தது. உலகில் பல நாடுகளில் கொரோனா சோதனை மிகவும் குறைவாக உள்ளது, இன்னும் சில நாடுகளில் இலவசம். ஆனால் இந்தியாவில் மட்டும் கொரோனா சோதனைக்கு 4500 ரூபாய் வாங்கப்பட்டது. இதை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இதை உடனே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    மக்களின் கோரிக்கை

    மக்களின் கோரிக்கை

    தற்போது மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் அரசு கொரோனா சோதனை மையங்களில் இனி முழுக்க முழுக்க கொரோனா சோதனை இலவசமாக செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் தனியார் சோதனை மையங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. கொரோனா சோதனைக்கு இதற்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் நிறுவனங்களுக்கு விரைவில் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

    English summary
    Coronavirus: Tests at govt labs made free hereafter, prices to be capped for private labs too says Health ministry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X