சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழித்திரு: விலகி இரு: வீட்டில் இரு.. கொரோனாவிற்கு எதிராக முதல்வர் திட்டம்.. ரூ.3,780 கோடி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,780 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நிதி என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    TN CM Edappadi Palanisamy speech | முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

    கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 23 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை ஒருவர் கொரோனாவால் பலியாகி உள்ளார். மதுரையை சேர்ந்த நபர் கொரோனாவால் இன்று காலை பலியானார்.

    இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று மக்கள் முன்னிலையில் பேசினார். கொரோனாவிற்கு எதிராக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    கொரோனா.. இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி.. அச்சுறுத்தும் அமெரிக்க புள்ளிவிவரம்.. பகீர் தகவல்! கொரோனா.. இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி.. அச்சுறுத்தும் அமெரிக்க புள்ளிவிவரம்.. பகீர் தகவல்!

    தமிழகத்தில் காட்டுத்தீ போல பரவுகிறது

    தமிழகத்தில் காட்டுத்தீ போல பரவுகிறது

    முதல்வர் பழனிச்சாமி தனது உரையில், கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது.மதம், ஜாதி, பொருளாதாரம் கடந்த மக்கள் ஒன்று கூட வேண்டும்.மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம். கொரோனாவை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது.

    முதல்வரின் அன்பு வேண்டுகோள

    முதல்வரின் அன்பு வேண்டுகோள

    வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதால் குடும்பம், சமுதாயம், நாட்டை காப்பாற்றலாம். நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள. ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள்.

    முதல்வரின் திட்டம் என்ன

    முதல்வரின் திட்டம் என்ன

    கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு.. என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம். இதில் மக்கள் எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் மட்டும்தான் வெற்றிபெற முடியும். இந்த கொரோனவை நாட்டில் இருந்து வெளியே அனுப்பாமல் நாம் ஓய கூடாது, மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

    மருத்துவ நிதி ஒதுக்கீடு

    மருத்துவ நிதி ஒதுக்கீடு

    தமிழக மருத்துவர்களும், சுகாதாரத்துறையும் வைரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மொத்த அதிமுக அரசும் தீவிரமாக வைரசுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,780 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நிதி என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: TN government gives Rs. 3,780 crore to treatment says CM Edappdi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X