சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நினைத்ததை விட அதிக கொரோனா பரவல்.. இப்போது குறைய வாய்ப்பில்லை.. தமிழகத்திற்கு காத்திருக்கும் சிக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நினைத்ததை விட அதிகமாக இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் தமிழ்கத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்

    தமிழ்கத்தில் தினமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் முந்தைய நாளை விட அதிகமாக கேஸ்கள் பரவி வருகிறது. மே 31ம் தேதி முதல்முறை 1000 கேஸ்கள் பதிவானது.

    அதை தொடர்ந்து தமிழகத்தில் தினமும் 1000+ கேஸ்கள் பதிவாகி வருகிறது. கடந்த 3 வாரமாக தமிழகத்தில் தினமும் 700+ கேஸ்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா இருக்கா இல்லையா.. வெறும் 20 நிமிஷத்தில் தெரியும்.. ஐஐடி ஹைதராபாத்தின் அசத்தல் கருவி!கொரோனா இருக்கா இல்லையா.. வெறும் 20 நிமிஷத்தில் தெரியும்.. ஐஐடி ஹைதராபாத்தின் அசத்தல் கருவி!

    எத்தனை கேஸ்கள்

    எத்தனை கேஸ்கள்

    தமிழகத்தில் கடந்த மே 28ம் தேதி 827 கேஸ்கள் பதிவானது. மே 29ம் தேதி 874 கேஸ்கள் பதிவானது. மே 30ம் தேதி 938 கேஸ்கள் பதிவானது. மே 31ம் தேதி 1149 கேஸ்கள் பதிவானது. ஜூன் 1ம் தேதி 1162 கேஸ்கள் பதிவானது. ஜூன் 2ம் தேதி 1091 கேஸ்கள் பதிவானது. ஜூன் 3ம் தேதி 1286 கேஸ்கள் பதிவானது. ஜூன் 4ம் தேதி 1384 கேஸ்கள் பதிவானது. ஜூன் 5ம் தேதி 1438 கேஸ்கள் பதிவானது. ஜூன் 6ம் தேதி 1458 கேஸ்கள் பதிவானத. இப்படி வரிசையாக கேஸ்கள் தினமும் அதிகரித்து வருகிறது.

    டெஸ்ட்கள்

    டெஸ்ட்கள்

    தமிழகத்தில் கொரோனா சோதனைகள் எண்ணிக்கை மாற்றி மாற்றி செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாள் 11 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டால், அடுத்த நாள் 12 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. சில நாள் 14 ஆயிரம் வரை சோதனைகள் செய்யப்படுகிறது. சில நாள்கள் மிக குறைவாக 10 ஆயிரம் மட்டுமே சோதனைகள் செய்யப்படுகிறது. நேற்று தமிழகத்தில் அதிகமாக 16022 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

    நேற்று அதிகரிக்க காரணம்

    நேற்று அதிகரிக்க காரணம்

    நேற்று தமிழகத்தில் அதிக கேஸ்கள் வர காரணம் அதிக டெஸ்ட் என்கிறார்கள். சராசரியாக செய்வதை விட தமிழகத்தில் நேற்று 2500 சோதனைகள் கூடுதலாக செய்யப்பட்டு இருக்கிறது.இதனால் கேஸ்களும் 1458 என்று அதிக எண்ணிக்கையில் வந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் கொரோனா சோதனைகள் குறைவாக செய்யப்பட்டாலும் கேஸ்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது.

    எப்போதும் அதிகரிக்கிறது

    எப்போதும் அதிகரிக்கிறது

    அதாவது 12000 சோதனைகள் செய்தாலும் 1000+ கேஸ்கள் வருகிறது. 15000 சோதனைகளை செய்தாலும் 1000+ கேஸ்களை வருகிறது. தமிழகத்தில் 1000+ கேஸ்கள் வருவது தற்போது மிக சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இதுதான் அச்சம் ஊட்டும் விஷயமாக இருக்கிறது. இதன் மூலம் சமுக பரவல் அதிகமாக இருக்கிறது. நினைத்ததை விட மக்கள் இடையே கொரோனா அதிகமாக பரவி உள்ளது என்கிறார்கள்.

    அதிக சோதனை

    அதிக சோதனை

    தமிழகத்தில் இப்போது அரசு அதிக சோதனைகளை செய்கிறது . மற்ற மாநிலங்களை விட மிக அதிகமாக தமிழக அரசு சோதனைகளை செய்கிறது. ஆனால் இந்த சோதனைகள் போதாது என்று கூறுகிறார்கள். தினமும் 16000+ சோதனைகள் செய்ய வேண்டும். 20 ஆயிரம் சோதனைகளை எட்ட வேண்டும். அப்போதுதான் பரவல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள். பரவல் கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    வரும் நாட்களில் கூடும்

    வரும் நாட்களில் கூடும்

    தமிழகத்தில் லேசாக 100 சோதனைகள் அதிகம் செய்தால் கூட அதிக கேஸ்கள் வருகிறது. இதனால் வரும் நாட்களில் கேஸ்கள் இன்னும் அதிகம் ஆகும் என்று கூறுகிறார்கள்.இந்தியாவில் இனிதான் கொரோனா உச்சம் பெறும் என்று கூறுகிறார்கள். இதனால் தமிழகத்தில் இனிதான் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் வரும் ஆபத்து உள்ளது. அரசு இப்போது செயல்படுவது போலவே இன்னும் சிறப்பாக செயல்பட்டு பரவலை தடுக்க வேண்டும்.

    English summary
    Coronavirus: Tamilnadu will see more number for cases according to more number of tests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X