சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைசுற்றல் கூட வராது.. 0.1% கூட தவறு நடக்காது.. ஒருநாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி: ராதாகிருஷ்ணன்

100 பேருக்கு ஒருநாளைக்கு தடுப்பூசி செலுத்த முடிவாகி உள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறினார்

Google Oneindia Tamil News

சென்னை: தடுப்பூசிபோட விரும்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்... அனைத்து வகையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும் என்றும், ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சூப்பராக நடந்த தடுப்பூசி ஒத்திகை... அறிக்கை தயார் செய்யும் சுகாதாரத்துறை..!

    கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, இன்று முதல், சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய, 5 மாவட்டங்களில், 17 இடங்களில் நடைபெற்று வருகிறது.. இதற்காக, 47 ஆயிரத்து, 200 கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி டெஸ்ட் செய்யப்பட்டது.. இதில், யாருக்குமே எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை.. அதனால் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது..

    டெல்லியில்... கொரோனா தடுப்பூசி ஒத்திகை ... ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு! டெல்லியில்... கொரோனா தடுப்பூசி ஒத்திகை ... ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு!

    பேட்டி

    பேட்டி

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை நடந்து வருகிறது.. கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் அதனை செலுத்துவதற்கான வழிமுறைகளை திருத்தி அமைப்பதற்கு இந்த ஒத்திகை உதவும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகை மையத்தில் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் சொன்னதாவது:

    நடைமுறைகள்

    நடைமுறைகள்

    ''இந்த ஒத்திகையில் முதல் கட்டமாக 25 நபர்களுக்கு ஊசி போடுவதற்கான நடைமுறை சோதனை செய்யப்படும். உண்மையான ஊசி எதுவும் இன்று செலுத்தப்படமாட்டாது... 25 நபர்களுக்கு ஊசி செலுத்துவதற்கு என்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும், தடுப்பூசி செலுத்தும் மையங்களில் என்ன வசதிகள் தேவை என்பதை தெரிந்துகொள்வதற்காகவும், வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த ஒத்திகை பயன்படும்.. ஒத்திகை நடைமுறையின் போது சந்தித்த சவால்கள் பற்றிய விளக்கத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு அளிக்கும்..

    தடுப்பூசி

    தடுப்பூசி

    தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன், முதலில் சுகாதார பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சோதனை மையத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும்.. இரண்டாம் கட்டமாக, முன்கள பணியாளர்கள் அதாவது தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பொது மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும்.

    செல்போன்கள்

    செல்போன்கள்

    அடுத்ததாக, இணை நோய்கள் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய அரசு வழங்கியுள்ள வழிமுறைப்படி தடுப்பூசி அளிக்கப்படும்.. கொரோனா தடுப்பூசி போட்டதற்கான குறுஞ்செய்தி அவரவர் செல்போன்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசி போடபட்டவர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பது கண்காணிக்கப்படும்.

    100 பேர்

    100 பேர்

    தலைசுற்றல் உள்ளிட்டவை ஏற்பட்டால் அவர்களுக்கு தருவதற்கு மருந்துகள் தயாராக இருக்கின்றன.. ஆனால், அப்படி எதுவும் நடக்காது... 0.1 சதவீதம் கூட தவறு நடக்கக்கூடாது என்பதற்காக அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம்.. தடுப்பூசிபோட விரும்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் கூறினர்.

    https://tamil.oneindia.com/news/washington/police-arrest-pharmacist-who-intentionally-spoiled-500-vaccine-doses-407591.html

    English summary
    coronavirus vaccine: decided to vaccinate 100 people per day, says Radhakrishnan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X