சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்பவும் விடாமல் திறந்தே இருக்கும் டாஸ்மாக் கடைகள்.. கேரளாவைப் போல மூடினால்தான் என்னவாம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஒட்டுமொத்த உலகமே கொரோனா பேரிடியால் பரிதவிக்கும் நிலையிலும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    திருப்பூரில் மதுக்கடையை மொய்த்த குடிமகன்கள் - வீடியோ

    இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    32 ஐரோப்பிய நாடுகள், துருக்கி சுற்றுலா பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை32 ஐரோப்பிய நாடுகள், துருக்கி சுற்றுலா பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை

    மதுபான கடைகள் மூடல்

    மதுபான கடைகள் மூடல்

    நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவில் மதுபானக் கடைகள் உள்ளிட்டவை அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை

    டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு வாணிப கழகம் மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக கவசங்கள், சேனிடைசர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் குடிமகன்களும் சானிடைசரை பயன்படுத்தும் வகையில் டாஸ்மாக் பார்களில் அவற்றை வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

    டாஸ்மாக்குக்கு மட்டும் விதிவிலக்கு

    டாஸ்மாக்குக்கு மட்டும் விதிவிலக்கு

    பொதுமக்கள் கூடும் அத்தனை இடங்களையும் தவிர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிடுகிறது. திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் என அத்தனையும் இழுத்து மூடப்படுகிறது. வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன. ஆனால் பாழாய்ப் போன மதுபானக் கடைகளுக்கு மட்டும் ஏன் விதிலக்கு என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.

    டாஸ்மாக் பார்கள் மட்டும் மூடல்

    டாஸ்மாக் பார்கள் மட்டும் மூடல்

    இந்நிலையில் இன்று மாலை அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து பார்கள்- டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மட்டும் அறிவித்தார். அப்போதும்கூட டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதாக அறிவிக்கவில்லை. கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோய் தாக்குகிற சூழலிலும் கூட எங்கே டடாஸ்மாக் கடைகளை மூடினால் வருவாய் பாதிக்குமோ என அஞ்சுகிற அரசாகத்தான் தமிழக அரசு இருக்கிறது. இது கொடுமையிலும் கொடுமை!

    English summary
    Social Activists has condemned that the TamilNadu govt is not closing the TASMAC shops due to Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X