2025 நிலவரப்படி அதிக தங்க இருப்பு உள்ள நாடுகள் .. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் வேறுபாடு என்ன?
சென்னை: இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 30000 ரூபாய் சவரனுக்கு உயர்ந்துள்ளது. வெறும் ஒன்றரை மாதத்தில் மட்டும் 15 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இந்த ஆண்டு 20 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு லட்சம் ரூபாய் என்கிற நிலையை ஒரு சவரன் எட்டப்போகிறது. இந்த சூழலில் 2025 நிலவரப்படி உலக நாடுகளில் எந்த நாடுகளில் எவ்வளவு தங்கம் உள்ளது எனபதை பார்ப்போம்.
தங்கம் விலை ஏற ஏற ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பில் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது. ஏனெனில் இன்று உலகம் முழுவதும் தங்க வரையறை முறை இல்லை என்றாலும், ஒரு நாட்டின் தங்கக் கையிருப் அதன் நாணயத்தின் வலிமையை மறைமுகமாகத் தீர்மானிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனால் அந்த நாட்டின் ரிசர்வ் வங்கிகள் அதிக அளவு தங்கம் வைத்திருப்பது, அந்த நாட்டின் பொருளாதாரம் நிதி ரீதியாக உறுதியானது என்ற வெளிப்பாட்டை உலக முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. இது ஒரு பாதுகாப்பு வலையாகக் கருதப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அந்த நாட்டின் நாணயத்தில் முதலீடு செய்கிறார்கள்.

இது ஒருபுறம் எனில், உலகப் பொருளாதாரத்தில் போர்கள், நாடுகளில் ஏற்படும் அரசியல் பதட்டங்கள் அல்லது நிதி நெருக்கடிகள் போன்ற நிச்சயமற்ற தன்மைகள் ஏற்படும்போது, முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் போட்ட பணத்தை எடுத்து, தங்கத்தில் முதலீடு செய்து சொத்துக்களை பாதுகாக்கிறார்கள். எனவே இப்படியான நெருக்கடியான நேரங்களில் ஒரு நாட்டின் ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தங்கக் கையிருப்பு, நாணயத்தின் பெரும் சரிவில் இருந்து நாட்டைப் பாதுகாக்க ஒரு இறுதிச் சொத்தாக செயல்படும். அதேபோல் பணவீக்கத்தால் நாட்டின் நாணயமதிப்பு சரியும் போது, அந்த சரிவை தடுக்க மறைமுகமாக தங்க கையிருப்பு உதவுகிறது.
அதனால் தான் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை தற்போது அதிக அளவில் வாரிகுவித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளின் நாணயத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு அந்த நாடுகள் குவித்து வைத்துள்ள தங்கத்தின் அளவும் ஒரு காரணமாக இருக்கிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு நிலவரப்படி, எந்தெந்த நாடுகளின் வசம், அதிக தங்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
உலகில் அதிக தங்கம் வைத்துள்ள டாப் 10 நாடுகள்
1. அமெரிக்கா - 8,133.46 மெட்ரிக் டன்கள்
2. ஜெர்மனி - 3,351.53 மெ. டன்கள்
3. இத்தாலி - 2,451.84 மெ. டன்கள்
4. பிரான்ஸ் - 2,436.97 மெ. டன்கள்
5. ரஷியா - 2,335.85 மெ. டன்கள்
6. சீனா - 2,264.32 மெ. டன்கள்
7. இந்தியா - 880.73 மெ. டன்கள்
8. ஜப்பான் - 845.97 மெ. டன்கள்
9. நெதர்லாந்து - 612.45 மெ. டன்கள்
10. துருக்கி - 584.93 மெ. டன்கள்
இந்தியாவில் உள்ள தங்த்தின் அளவு என்ன
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.73 மெட்ரிக் டன்களாக இருக்கிறது. இந்த இருப்பில் பெரும்பகுதி, தோராயமாக 510.46 மெ. டன், இந்தியாவிற்குள் இருக்கிறது. மீதமுள்ள 324.01 மெட்ரிக் டன்கள் பாங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பாங்க் பார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்டில் இருக்கிறது. கூடுதலாக, 20.26 மெட்ரிடன் தங்கம் வைப்புத்தொகைகளில் வைக்கப்பட்டிருக்கிறது.
2025-ம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 20 சதவிகிதம் உயர்ந்த காரணத்தால், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளால் பெருமளவில் தங்கம் வாங்கி குவிக்கப்படுகிறது. ஐ.எம்.எப். தகவலின்படி, மத்திய வங்கிகள் அண்மையில் மட்டும் தங்கள் இருப்பில் 37 மெட்ரிக் டன் தங்கத்தைச் சேர்த்துள்ளன. இது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது 206 சதவிகிதம் அதிகமாகும். இப்படி தங்கத்தை மத்திய வங்கிகளே வாங்கி குவித்தது தான் அதன் விலை கடுமையாக உயர காரணம் ஆகும். மத்திய வங்கிகள் வாங்கி குவிக்க காரணம். அமெரிக்காவின் பணவீக்கம், ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் பல்வேறு நாடுகளில் நிலவும் அரசியல் குழப்பம் போன்றவை காரணமாக உள்ளன. எனவே நிச்சமயற்றநிலை வரும் ஆபத்து உள்ளதால் தங்கத்தை நாடுகள் வாங்கி குவித்துள்ளன.
உலகில் எந்த நாட்டிடம் அதிக தங்கம் உள்ளது
அமெரிக்கா தான் உலகின் மிகப்பெரிய அளவிலான தங்க இருப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2025-ம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் 8,133.46 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கிறது. அவற்றில் பெரும்பாலும் 'போர்ட் நாக்ஸ்' போன்ற இடங்களில் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலரின் தற்போதைய வலுவான நிலைக்கு தங்கத்தை அதிகமாக வைத்திருப்பதும் முக்கிய காரணமாக உள்ளது.
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை












Click it and Unblock the Notifications