நிலைமை கைமீறி போகிறது.. இதை உன்னிப்பாக கவனியுங்க.. தமிழக அரசுக்கு அலர்ட் கொடுக்கும் டிடிவி தினகரன்
சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு வெறும் 700 ஆக இருந்தது.
இதன்பின்னர் தமிழகத்துக்குள்ளும் ஓமிக்ரான் புகுந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. தினமும் தொற்று இரட்டிப்பாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையின் நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது.

சென்னையின் நிலைமை பரிதாபம்
அதாவது தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 10,000 என்றால் இதில் சென்னையின் பங்கு மட்டுமே 5,000 மொத்த பாதிப்பில் சுமார் 50% சென்னையில்தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

கூடுதல் கட்டுப்பாடுகள் வரும்?
இதனால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிடிவி தினகரன் அலர்ட்
இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பு அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

கவனமாகக் கையாள வேண்டும்
அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய்ப் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications