செம நியூஸ்.. தமிழகத்தில் தொடர்ந்து குறையும் ஆக்டிவ் கேஸ்கள்.. அடியோடு சரியும் கொரோனா!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

வேகமாக குறையும் கொரோனா
தமிழக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 1,200-க்குள் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். மொத்த பாதிப்பு 26,96,328 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பும் குறைவு
கொரோனாவுக்கு மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். கோவையில் 2 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு, அரியலூரில் ஒருவர் இறந்தார். இதுவரை கொரோனாவுக்கு பேர் 36,033 உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,341 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,47,504 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

முதலிடம்
12,791 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,22,253 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,95,02,799 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 144 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

கோவை
கோவையில் 130 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் நேற்றைய பாதிப்பை விட இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது செங்கல்பட்டில் 95 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 18 பேருக்கும், திருவள்ளூரில் 40 பேருக்கும், திருச்சியில் 46 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 77 பேருக்கும், விருதுநகரில் 9 பேருக்கும், ஈரோட்டில் 69 பேருக்கும், சேலத்தில் 57 பேருக்கும், நாமக்கல்லில் 48 பேருக்கும், தஞ்சாவூரில் 55 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications