மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம் இல்லை... குழந்தைகள் தடுப்பூசி பற்றி அமைச்சர் சொன்ன தகவல் இதுதான்
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசு அனுமதி அளித்ததுடன் தடுப்பூசி போடுவது தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசு அனுமதி அளித்ததுடன் தடுப்பூசி போடுவது தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவில் தினசரியும் 15 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தினசரியும் 1300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழி தடுப்பூசி மட்டுமே.

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு வேக்சின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 95 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் முழு வீச்சில் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 5 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது பல கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முதல் மெகா வேக்சின் முகாமில் 28.91 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டது. அதேபோல செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற முகாமில் 16.43 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் முறையே 25.04 லட்சம் மற்றும் 17.04 லட்சம் பேருக்கு வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 22,52,641 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பண்டிகைக்காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அனுமதி கிடைத்ததும் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று கூறியுள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து வருவதாக கூறினார். மத்திய அரசு அனுமதி அளித்ததுடன் தடுப்பூசி போடுவது தொடங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications