தமிழ்நாட்டில் இன்று உச்சம் தொட்ட கொரோனா 3509 பேர் பாதிப்பு - 2236 பேர் மீண்டனர் - 45 பேர் மரணம்
தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் 3481, 60வயதிற்கு மேற்பட்டவர்கள் 8423 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. 13 வயது முதல் 60 வயதிற்குள் மொத்தம் 59073பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 22245 பேர் பெண்கள், 36808 பேர் ஆண்கள் ஆவர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 45 பேர் இன்று மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரேனா வைரஸ் பாதிக்கப்பட்ட 70977 பேரில் இதுவரை சிகிச்சை பெற்று 39999 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளளது.
கொரோனாவிற்கு இன்று 45 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் 29 பேர் அரசு மருத்துவமனையிலும் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications