மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் முகாம்களில் சென்று போட்டுக்கொள்ளலாம். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி இருக்கிறது. தொற்று அதிகமாகி வருவதால் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்த மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.

இந்தநிலையில் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தாக்கும் அபாயம் உள்ளதால் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே உயர் நீதிமன்றம தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications