சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 2.0: உங்க வீட்டு குட்டீஸ்கள் மீது கவனம் - இந்த அறிகுறிகள் இருந்தால் செக் பண்ணுங்க

நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ,மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் புதுவகை கொரோனா பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாமல் நுரையீரலைத் தாக்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் எச்சரிக்கின்றன. கொரோனா இரண்டாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் காய்ச்சல் ,மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Recommended Video

    கொரோனா… வாய்பகுதி அறிகுறிகள்: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா முதியவர்களுக்கும், இணைநோய் உள்ளவர்களுக்கும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதேசமயம் கொரோனா இரண்டாம் நிலை குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை கைமீறிப் போய் விட்டதாகவே தெரிகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 12ஆயிரத்தை தொட்டு விட்டது.

    இரண்டாவது அலையில் வைரஸ் வேமகாக உருமாறிக்கொண்டிருக்கிறது. சுமார் 200 வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் தற்போது இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில வைரஸ்கள் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவுகின்றன. புதுவகை கொரோனா பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாமல் நுரையீரலைத் தாக்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    8 மாதத்துக்கு முன் மரணமடைந்தவருக்கு கொரோனா ரிசல்ட்.. இறந்தவருக்கே ஷாக் கொடுத்த அரசு மருத்துவமனை! 8 மாதத்துக்கு முன் மரணமடைந்தவருக்கு கொரோனா ரிசல்ட்.. இறந்தவருக்கே ஷாக் கொடுத்த அரசு மருத்துவமனை!

    வேகமாக பரவும் கொரோனா

    வேகமாக பரவும் கொரோனா

    கடந்த 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது தினசரி நோய் தொற்று சராசரி கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூலை 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மாநிலத்தில் மொத்தம் 64,251 நோய் தொற்று பதிவாகியுள்ளன, 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியபோது, சராசரியாக ஒரு நாளைக்கு 6,425 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. கடந்த ஆண்டில் ஜூலை 27 அன்று அந்த ஆண்டில் உச்சபட்சமாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பதிவாகியுள்ளது.

    நோய் தொற்று அதிகரிப்பு

    நோய் தொற்று அதிகரிப்பு

    இந்த ஆண்டு மார்ச் 1 முதல் 10 வரை மாநிலத்தில் 5,365 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. பதிவு செய்யப்பட்டுள்ளன, இந்த காலகட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 536 பேர் பாதிக்கப்பட்டனர். இப்போது இரண்டாவது அலையில் கடந்த 11 முதல் 20ஆம் தேதி வரை, தமிழகத்தில் 86,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரே நாளில் 12ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    குழந்தைகளை தாக்கும் கொரோனா

    குழந்தைகளை தாக்கும் கொரோனா

    கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான குழந்தைகள் நாடு முழுவதும் பாதிப்பில் சிக்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 60884 குழந்தைகளும் ,சத்தீஸ்கரில் 5 ஆயிரத்து 940 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காய்ச்சல் தலைவலி

    காய்ச்சல் தலைவலி

    தமிழகத்தில் கடந்த சில நாட்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு காய்ச்சல்,மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் பாதிப்பு

    குழந்தைகள் பாதிப்பு

    18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி பல்வேறு நோய் அறிகுறிகளும் சிலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒரு வயது முதல் 8 வயதுள்ள குழந்தைகள் இந்த ஆண்டு அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    என்னென்ன அறிகுறிகள்

    என்னென்ன அறிகுறிகள்

    10 வயதுக்கும் குறைவாக இருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரானா பாதித்த அறிகுறிகள் தென்படுவதில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95 சதவிகித குழந்தைகளுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான ஒரு சில அறிகுறிகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    குழந்தைகள் மீது கவனம்

    குழந்தைகள் மீது கவனம்

    102 டிகிரி பாரன்ஹீட் காய்ச்சல், மூச்சுத்திணறல், வேகமாக சுவாசித்தல், ஒரு நாளைக்கு ஆறு முறைக்கு குறைவாக சிறுநீர் கழித்தல் போதுமான அளவு சாப்பிடாத குழந்தை, தடிப்புகள், இருமல் முறைகளில் மாற்றங்கள், கண் எரிச்சல், தலைவலி போன்ற அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

    English summary
    Medical reports warn that a new type of corona is attacking the lungs on a large scale without symptoms in the context of the second wave of corona virus outbreak in India. Doctors have advised that children are more likely to be affected by the second wave of corona and should seek immediate medical attention if they experience symptoms including fever, nasal congestion, diarrhea and headache.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X