‛‛சசிகலாவை பதறவைத்த பசு’’.. ஆக்ரோஷமானதால் பரபரப்பு..புதுமனை புகுவிழாவில் மிரண்டுப்போன உறவினர்கள்
சென்னை: சசிகலா போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே பிரமாண்டமாக கட்டியுள்ள பங்களாவில் கிரகப்பிரவேசம் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட பசு சசிகலா மற்றும் அவரது உறவினர்களை நடுநடுங்க வைத்த சம்பவம் நடந்தது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் முதல்வர் பதவி மீது கண்வைத்த நிலையில் தான் உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்புடன் அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று கூறி வருகிறார். தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் சசிகலா தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்றே கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
ரூ.480 கோடி அபராதம் கட்டி சென்னை போயஸ் கார்டன் புது பங்களாவை மீட்ட சசிகலா-கிரகப்பிரவேச குஷி பின்னணி!
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு சசிகலா கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு சென்றிருந்தார். ஜெயலலிதாவின் சிலையோடு கூடிய நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டியவர் மீண்டும் சென்னை திரும்பினார். இந்நிலையில் தான் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலா பிரமாண்டமாக சொகுசு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களாவின் கிரகப்பிரவேஷம் இப்போது நடந்துள்ளது.
இந்த கிரகப்பிரவேச விழாவின்போது பங்களாவின் முன்பு பசு மாடு, கன்று குட்டிகள் அழைத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டன. பசு மாடு ஒன்றின் நெற்றியில் சசிகலா தடவி கொடுத்து வணங்கினார். அதன்பிறகு அந்த பசுவுக்கு அவர் சந்தனம் பூச முயன்றார். இந்த வேளையில் பசு மிரண்டுப்போனது. பசுவை ஒருவர் பிடித்து இருந்தாலும் கூட அது ஆக்ரோஷமாக மிரண்டது. இதனால் அந்த நபர் தனது பிடியை விட்டார்.
போயஸ் கார்டனில்.. சசிகலா நுழைஞ்சதுமே.. ஓஹோ, "கை"க்கு வந்துருச்சா? இதுதான் விஷயமா? இனி ஆட்டம் ஆரம்பம்
இதையடுத்து தரையில் இருந்து ஆக்ரோஷமாக துள்ளிய பசு சுருண்டு விழுந்தது. இதனால் சசிகலா மற்றும் அங்கு கூடியிருந்த அவரது உறவினர்கள் மிரண்டு போயினர். இதுதொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications