“லிஸ்டு” போட்ட ஆளுநர் ரவி.. பறக்கும் வாழ்த்துகள்! அரசியலா? - சு.வெங்கடேசனுக்கு வந்த “டவுட்டு”
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில் அவரது செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் சந்தேகம் கிளப்பி இருக்கிறார். பிரமுகர்களின் பட்டியலை எடுத்து தனது வாழ்த்துகளை நேரில் தருமாறு ஆளுநர் அனுப்பி வைப்பது நிர்வாக செயல்பாடா? அரசியல் செயல்பாடா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்துவிட்டு நாகாலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி பணிபுரிந்த காலத்திலேயே அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இருந்தன. நாகா அமைப்புகள் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தன.

அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி - தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்குகள் நிலவி வந்தன. பல விசயங்களில் கருத்து வேறுபாடுகளும் உள்ளன. 7 தமிழர் விடுதலை மசோதா, நீட் எதிர்ப்பு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை என தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை அவர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கிடப்பில் கிடக்கும் மசோதாக்கள்
ஆனால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் மற்ற மசோதாக்களின் முடிவு என்னவென்றே தெரியாத சூழல் இதுவரை நிலவி வருகிறது. இது அல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜகவினர் அடிக்கடி சந்திப்பது, சனாதனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது என பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன.

பல்கலைக்கழக வேந்தர்
அத்துடன் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்என் ரவி துணை வேந்தர்கள் நியமனம், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்பாக எடுக்கும் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக ஆளுநரை வேந்தராக நியமிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.

தேநீர் விருந்து புறக்கணிப்பு
தொடர் மோதல் போக்கின் காரணமாக ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தையே புறக்கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியானது. சமீபத்தில் பலரும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டனர். மறுபக்கம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

சு.வெங்கடேசன் ட்வீட்
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவியின் செயல்பாடு தொடர்பாக சந்தேகம் எழுப்பி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன். அதில், "மாவட்டந்தோறும் முக்கிய பிரமுகர்களின் பட்டியலை எடுத்து தனது வாழ்த்துகளை நேரில் தருமாறு அனுப்பி வைக்கிறார் தமிழக ஆளுநர். அவரது ஆர்வம், நிர்வாக செயல்பாடா? அரசியல் செயல்பாடா?" என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications