சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்.. ஏமாற்றிய பலே இளைஞர் கைது.. பல லட்சம் பணம், நகை, கார் பறிமுதல்

Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு புக்கிங்கில் பல லட்சம் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், 24 லட்ச ரூபாய் பணம், 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள்,1 ஐபேட், 1 லேப்டாப் மற்றும் குற்றசெயலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதை வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடத்துவது ஆங்காங்கே நடக்கிறது. சில இடங்களில் ஆன்லைன் கிரிக்கட் புக்கிங் மூலம் மோசடியும் நடந்துள்ளது. சென்னையில் இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாட்டு புக்கிங்கில் பல லட்சம் மோசடி செய்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பெட்டிங்கிற்காக பணத்தை கட்டி சுமார் 87 லட்சத்தை இழந்து ஏமாந்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டம்... போக்கர்... ஆந்திராவில் தடை!! ஆன்லைன் ரம்மி சூதாட்டம்... போக்கர்... ஆந்திராவில் தடை!!

ஏமாற்றுதல்

ஏமாற்றுதல்

விசாரணையில் ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்த பின்பு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவது தெரியவந்தது.

பதுங்கியிருந்த நபர் கைது

பதுங்கியிருந்த நபர் கைது

இதனடிப்படையில் பணபரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மகாபலிபுரத்தில் தனியார் ஹோட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்து அந்த நபரை கைது செய்தனர். பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

30 பேரை ஏமாற்றியுள்ளார்

30 பேரை ஏமாற்றியுள்ளார்

மேலும் ஹரிகிருஷ்ணன் தனது தந்தையின் மறைவிற்கு பிறகு அவரது ஆன்லைன் சூதாட்ட புக்கிங் தொழிலையே கையில் எடுத்தது தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டு மேட்ச் பெட்டிங்கிலும் முக்கியாக செயல்பட்டு 25 முதல் 30 நபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

24லட்சம் பணம் பறிமுதல்

24லட்சம் பணம் பறிமுதல்

மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், 24 லட்ச ரூபாய் பணம், 6 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள்,1 ஐபேட், 1 லேப்டாப் மற்றும் குற்றசெயலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
The Central Crime Branch Cyber Crime Police have arrested a person who swindled several lakhs in cricket bookie in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X