சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜி நீங்களா? மாரிதாஸ், மோகன்ஜியுடன் போட்டோ! சித்தார்த்தை சாடிய அதே வீரர்தான்.. திருமா மீது விமர்சனம்?

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை விமான நிலையத்தில் வீரர்கள் இந்தியில் பேசி தனது பெற்றோரை 20 நிமிடங்களுக்கு மேல் காக்க வைத்ததாக குற்றம்சாட்டிய நடிகர் சித்தார்த்தை ஒருமுறையில் விமர்சித்து வீடியோ வெளியிட்ட சிஆர்பிஎப் வீரர் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ், இயக்குநர் மோகன் ஜி ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இவர்தான் கடந்த சில நாட்களுக்கு முன் திருமாவளவனை விமர்சித்தவர் என்றும் கூறப்படுகிறது.

சித்தார்த்தின் விமர்சனத்தை வீடியோ ஒன்றை வெளியிட்ட சிஆர்பிஎப் வீரர், "இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை பேச சொல்லுங்கள் நாங்கள் பேசுவோம். நீங்க எப்படி ஆங்கிலத்தில் பேச சொல்லலாம்? நாங்கள் என்ன வெள்ளையர்களா? வெள்ளையர்களே இங்கு வந்து இந்தி கற்கிறார்கள்.

உன்னை நாங்கள் துன்புறுத்தி விட்டோமா? பெற்றோரிடம் சில்லறை இருந்தது என சொல்லி இருக்கிறீர்கள். சில்லறை காசை எந்த மொழியில் எடுங்க சொன்னார்கள்? அதை எப்படி நீ புரிஞ்சுகிட்ட? சைகை செய்தார்களா? அதை முதலில் சொல்லு. வேலையில்லாதவர்கள் துன்புறுத்துவதாக சொல்லி இருக்கிறீர்கள்.

 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மதுரை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்.. தமிழ்நாடு அரசு அதிரடி 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மதுரை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்.. தமிழ்நாடு அரசு அதிரடி

ஒருமையில் பேச்சு

ஒருமையில் பேச்சு

நீ வேலையில் இருக்கியா? திரையுலகில் நீ என்னென்ன அட்டகாசம் செய்தாய் என யாருக்கும் தெரியாதா? கண்ணியமாக பேச முதலில் கற்றுக்கொள். அது அவர்கள் வேலை. அரை மணி நேரம் அல்ல.. 2 மணி நேரம் என்றாலும் நிற்க வேண்டும். சந்தேகத்தில் நிற்க சொன்னால் நின்றுதான் ஆக வேண்டும். ஒரு நிமிடம் அங்கிருந்து நகர்ந்து பார். எதற்கெடுத்தாலும் கூழ கும்பிடு போடும் அரசியல்வாதி என்று நினைத்தாயா?

இந்தி இருக்கிறது

இந்தி இருக்கிறது

எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தி தெரியவில்லை என்று வெட்கப்பட்டு சொல்லிவிட்டு போ! ஆங்கிலம் தெரியாது என்று சொல்வதற்கு நாங்கள் வெட்கப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை படிக்கும் அவசியமும் இல்லை. அலுவல் மொழி இந்தி இருக்கிறது. நாங்கள் அதை கற்கிறோம். வார்த்தையை பார்த்து பயன்படுத்துங்க. ஜெய்ஹிந்த்" என்றார்.

6 மாதத்திற்கு முன் பேச்சு

6 மாதத்திற்கு முன் பேச்சு

இவரை எங்கேயே பார்த்ததை போல் இருக்கிறதே என்ற தேடியபோது இவர் பேசிய பழைய வீடியோவும் கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் இவர் வெளியிட்ட வீடியோவில், "நாட்டை காக்கும் இளைஞர்களுக்கு மட்டும் தான் அக்னிபாத் திட்டமே தவிர தேச துரோகிகளுக்கு இல்லை. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்காக தீக்குளிப்பதை விட நாட்டுக்காக உயிர்விடுவது மேல்.

 அரசியல், மதம்

அரசியல், மதம்

அரசியலையோ மதத்தையோ கொண்டுவந்து நாட்டை பிளவுபடுத்த வேண்டாம். உள்நாட்டு கலவரத்தை தூண்டும் நீங்கள் ராணுவத்துக்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? புரட்சி செய்யப்போகிறீர்களா? ராணுவத்துக்கு அதுபோன்றவர்கள் தேவையில்லை. எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் இளைஞர்கள் ஏன் ராணுவத்திற்கு வரவேண்டும்? மருத்துவராக பொறியாளராக ஊருக்கு போகலாமே.

 ராணுவ வீரர் இப்படி பேசலாமா?

ராணுவ வீரர் இப்படி பேசலாமா?

ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் இப்படி அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிடுவது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வரும் நிலையில், இவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து ஒரு ஆடியோ வெளியானது.

திருமாவளவன் மீது விமர்சனம்

திருமாவளவன் மீது விமர்சனம்

அதில், "திருமாவளவன் தனி தமிழ்நாடு கேட்கிறாராம். முதலில் தனியாக ஒரு வார்டில் நின்று வெல்ல முடியுமா? நாட்டை காக்கவே நாங்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளோம். இப்படிப் பிரிக்க இல்லை. சுயநலத்திற்காக தனி நாடு கேட்பீர்களா? இந்த அளவுக்கு உங்களைப் பேச வைத்தது ஆட்சியாளர்கள் செய்த தவறு. கருத்துச் சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாமா? தனி தமிழ்நாடு என வீதியில் இறங்கினால் உங்களை வந்தே மாதரம் சொல்ல வைப்போம்" என பேசப்பட்டு இருந்தது.

பாஜக ஆதரவு

பாஜக ஆதரவு

அந்த ஆடியோவில் பேசியது, சித்தார்த்தை விமர்சித்த அக்னிபாத்தை ஆதரித்து பேசிய அதே சிஆர்பிஎப் வீரர்தான் என்று கூறப்படுகிறது. அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்றும், மேகாலயாவில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிஆர்பிஎப் வீரரின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க, பாஜகவினர் அவருக்கு ஆதரவாக வந்தனர்.

மாரிதாஸ், மோகன் ஜியுடன் போட்டோ

மாரிதாஸ், மோகன் ஜியுடன் போட்டோ

இந்த நிலையில் சித்தார்த்தை ஒருமையில் பேசிய ராணுவ வீரர் பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரிகளுடன் நிற்பதை போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. ஒரு படத்தில் பாஜக ஆதரவு யூடியூபரான மாரிதாஸுடன் அவர் நிற்பதை போன்றும், மற்றொரு படத்தில் திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய மோகன் ஜியுடன் நிற்பதைபோன்றும் உள்ளன. ஒரு ராணுவ வீரர் இப்படி வெளிப்படையாக தன்னுடைய அரசியல் நிலைபாட்டை காட்டலாமா என்ற கேள்வி எழுகிறது.

English summary
The photos of CRPF soldier with BJP supporter Maridhas and director Mohan G, who criticized actor Siddharth for accusing soldier speaking in Hindi at Madurai airport. It is also said that he is the one who criticized Thirumavalavan a few days ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X