பசங்க மேல கை வச்சிட்டாங்க..வெறி ஆயிருச்சு! TTF வாசனுக்கு கேஸ் கட்டபை வாங்குற மாதிரி.. சிக்கிட்டாரே!
சென்னை : கடலூருக்கு சென்ற பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனை பார்க்கச் சென்ற ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்,"கேஸ் வாங்குவது நம்ம வாழ்க்கையில் துணிக்கடையில் கட்டை பை வாங்குற மாதிரி" எனவும் "பசங்க மேல கை வச்சுட்டாங்க..செம வெறி ஆயிட்டேன்" என டிடிஎஃப் வாசன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில் கடலூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பைக் சாகச யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த 14ஆம் தேதி கடலூர் வந்தபோது அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
கடலூர் புதுப்பாளையத்தில் செந்தில் செல்அம் என்ற இளம் இயக்குனர் கடலூரில் திரைப்பட அலுவலகம் திறக்க பைக் ரைடர் மற்றும் யூட்யூபரான டிடிஎஃப் வாசனை கடந்த 14ஆம் தேதி கடலூருக்கு அழைத்திருந்தார். இதனையடுத்து அங்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர்.

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசனை பாலோ செய்யும் ரசிகர்கள் கேடிஎம் போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களோடு கடலூர் புதுப்பாளையத்திற்கு படையெடுத்தனர். டிடிஎஃப் வாசனை காண ஒரே நேரத்தில் அதிக அளவில் இளைஞர்கள் கூடியதாலும், கூடிய புள்ளிங்கோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆரன் அடித்துக் கொண்டும், வாகனத்தை முறுக்கி அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்பியதாலும் புதுப்பாளையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

அராஜகம்
காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியும் கூட்டம் கூடியதாலும் வாசனின் ரசிகர்களின் அடாவடித்தனத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர் அதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டிடிஎஃப் வாசனை காண வேண்டும் என்பதற்காக அதிவேகமாக வாகனங்களை இயக்கி காவல் துறையினரை கல்வீசி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. டிடிஎஃப் வாசனின் ரசிகர்களின் நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்.

கை வச்சுட்டாங்க
மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கிய 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராத தொகையும் விதித்தனர். கேஸ் வாங்குவது நம்ம வாழ்க்கையில் துணிக்கடையில் கட்டை பை வாங்குற மாதிரி" எனவும் "பசங்க மேல கை வச்சுட்டாங்க..செம வெறி ஆயிட்டேன்" என டிடிஎஃப் வாசன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. இதுகுறித்து லைவ் வீடியோவில் பேசியிருக்கும் டிடிஎஃப் வாசன்," டிஎன் 31 என் வாழ்க்கையில் மறக்க முடியாது வாழ்க்கை முழுவதும் நான் அதை சுமந்து கொண்டே இருப்பேன்.

வெறி ஆயிட்டேன்
அது என்னன்னு நான் அப்புறமா சொல்றேன்.. நம்ம மேல அஞ்சு வழக்கு போட்டு இருக்காங்க.. இதுக்கு நான் வருத்தப்படவில்லை. நம்ம தான் துணிக்கடையில் கட்ட பை வாங்குற மாதிரி கேஸ் வாங்குறோமே என்னை அடிச்சிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். ஆனா அவங்க பசங்க மேல கை வச்சுட்டாங்க.. நான் போலீஸ் கிட்ட கேட்டதுக்கு அவங்க கல் எடுத்து அடிச்சாங்க தம்பின்னு பொய் சொன்னாங்க.. செம வெறி ஆயிட்டேன்! யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராதா.. நம்மள விரட்டின போலீஸ்காரங்களை நம்மள ராஜ மரியாதையாக உட்கார வைப்பாங்க இது வாய் வார்த்தையா சொல்றதில்ல கண்டிப்பா நடக்கும் டிடிஎஃப்" என பேசி இருந்தார்.

வழக்குப் பதிவு
இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது பேச்சு இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல், சமூக வலைதளங்களில் ஊறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications