Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கரண்ட் பில்" கணக்கில் வருது மாற்றம்.. டெண்டர் + ஸ்மார்ட் ஒர்க் + நம்பிக்கை.. தமிழக அரசின் செம ஸ்பீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. அதுகுறித்த அறிவிப்புகளும், செயல்பாடுகளும் ஒவ்வொன்றும் வெளியாகி வரும் நிலையில், இன்னொரு நம்பிக்கையூட்டும் செய்தியை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மின் கணக்கீட்டாளர்களை தனியாக நியமித்து பணிகளையும் மேற்கொள்கிறது. ஆனால், மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக சமீபத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

current bill: what are benefits of Smart Meters and calculate the monthly electricity bill in tamil nadu

எனவே, இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு: ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன? அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் ..

அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். இதற்கு மின் கணக்கீட்டாளர்களே தேவையில்லை... ஸ்மார்ட் மீட்டரில் இருக்கும் சிம் கார்டு போன்ற அமைப்பால் குறிப்பிட்ட அளவிற்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்பதே இந்த திட்டத்தின் சாராம்சம்.

மின்சார திருட்டு: மின்சாரம் திருட்டை தடுத்தல், மின்சார பயன்பாட்டை ஒரே இடத்தில் இருந்து கணக்கீடு செய்தல், வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இது போன்றவற்றை ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.

அதுமட்டுமல்ல, ஸ்மார்ட் மீட்டர் வந்துவிட்டால் மின்சார அலுவலகத்தில் இருந்தவரை ஒவ்வொரு வீட்டின் மின்சார பயன்பாட்டை கணக்கீடு செய்ய முடியும், எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது அதற்கான தொகை எவ்வளவு என்ற தொகையை மீட்டரில் நுகர்வோர் அறிந்து கொள்ள முடியும். வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடு, வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.. அந்தவகையில், முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த சர்வதேச டெண்டரையும் அரசு கோரியுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்கள்: இதனிடையே, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டது.. எனவே எப்போது அந்த நடைமுறை அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது இதுகுறித்து நிறைய முறை விளக்கம் தந்துள்ளார்.. அதாவது, "இப்போதைக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது... மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்றால் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.. புதிதாக ஆட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது.

கேள்விக்குறி: மின்மாற்றிகளுக்கும் சேர்த்து மீட்டர் பொருத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் நிலையில் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் கணக்கெடுக்கும் பணியாளர்களின் வேலை கேள்விக்குறி ஆகிவிடும்.. அதனால், எதாவது ஒரு திட்டம் மட்டும் கொண்டு வர முடியும்.. அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதந்தோறும் மின் கணக்கீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

இந்நிலையில், புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ளார்.. மின்சாரத்துறை அவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.. தற்போது, மாதந்தோறும் மின் கணக்கீடு குறித்து, தங்கம் தென்னரசு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்..

மீண்டும் உறுதி: தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பொறியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "மழை காரணமாக சென்னையில் 3 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பட்டினப்பாக்கம் பகுதியில் மின்சாரம் சீராக விநியோகம் உடனே செய்யப்படும்.. பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும்" என்று உறுதி தந்துள்ளார்.

விரைவில் அமல்: நீண்ட காலமாகவே, மாதந்தோறும் கணக்கீடு திட்டம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.. இதையடுத்து, இந்த விவகாரத்தில், பாமக டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் தலையிட்டனர்..

"இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அந்த மாதத்தில் நுகர்வோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.. மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.. இப்படி மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிப்பதில் மின்சார வாரியத்திற்கு எந்த பிரச்சினையும் கிடையாது.. எனவே, மாதந்தோறும் மின்கணக்கீட்டை செய்து, பொதுமக்களின் பாரத்தை குறைக்க வேண்டும்" கேட்டுக் கொண்டிருந்தனர்..

தற்போது, டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், விரைவில் மாதந்தோறும் மின்கணக்கீடு அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+