வேகமெடுத்த டிட்வா.. 10 கிமீ வேகத்தில் சென்னை நோக்கி நகரும் புயல்.. கனமழை விடாது போலயே!
சென்னை: மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்பை விட 2 கிலோ மீட்டர் வேகமெடுத்து சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் தற்போது இலங்கையில் இருந்து விலகி இன்று டெல்டா மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது.

புயலின் வேகம் அதிகரிப்பு
இதனால் தஞ்சை, திருவாரூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயல் இன்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னையை நோக்கி புயல் நகர தொடங்கியுள்ள நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
தற்போது புயல் வேதாரண்யத்திற்கு 90 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை நெருங்கும் புயல்
முன்பை விட 2 கிலோ மீட்டர் வேகமெடுத்து டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. நாளை(30 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரா வடதமிழகம் நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்காமலேயே கடலிலேயே புயல் வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. எனினும் புயல் சென்னையில் இருந்து 25 கிமீ தூரம் வரை நெருங்கி வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.
இதனால் டிட்வா புயல் தாக்கம் காரணமாக, வட தமிழகத்தில் இன்று தரைக்காற்று 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். டெல்டா மாவட்டங்களில் 80 கி.மீ வேகத்தில் வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கி.மீ வரை டிட்வா புயல் நெருங்கி வரும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மிக கனமழை அலர்ட்
இதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்றும் நாளையும் விட்டு விட்டு மிக கனமழை பெய்யும் எனவும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதேபோல் கடலோர மாவட்டங்களில் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக உயரம் எழுந்து வருகிறது. காற்றும் வழக்கத்திற்கு அதிகமாக வீசி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
டிட்வா புயல் காரணமாக தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையை புயல் நெருங்க நெருங்க கனமழை பெய்யக்கூடும் என்பதால், பல்வேறு பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் கால மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மின் வாரிய ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications