வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்... மேற்கு வங்கம் ஒடிசா இடையே 26ல் கரையைக் கடக்கும்
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை 24ஆம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 26ஆம் தேதி இந்த புயலானது மேற்கு வங்கம் ஒடிசா இடையே கரையைக் கடக்கும் எனவும் வானிலை மைய
சென்னை: தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்திலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி, சேலம், நீலகிரி, சிவகங்கை, கன்னியாகுமரியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல், தஞ்சாவூரில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை,காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
22ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை,காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
23,24ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 26ஆம் தேதி புயலானது மேற்கு வங்கம் ஒடிசா இடையே கரையைக் கடக்கக்கூடும். எனவே 22ஆம் தேதி முதல் மீனவர்கள் வங்கக் கடல் பகுதிகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடந்த வாரம் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ் தே புயலாக மாறி கடந்த 17ஆம் தேதி குஜராத் சௌராஸ்டிரா அருகே கரையைக் கடந்தது. இந்த புயல் வலுவடைந்தாலும் அதன் தாக்கம் நீடிக்கிறது. இந்த நிலையில் புதிய புயல் ஒன்று வங்கக் கடலில் 24ஆம் தேதி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications