சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவளத்தை சூறையாடிய மாண்டஸ்..என்ன ஒரு கோர தாண்டவம் - பட்டினப்பாக்கத்தில் பாதிப்பு இவ்வளவா?

Google Oneindia Tamil News

சென்னை: மாண்டஸ் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கோவளம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கடைகள் சின்னாபின்னமாகியுள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரை முற்றிலும் சேதமடைந்து மணலால் மூடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது. மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கோவளம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட கடைகளை மாண்டஸ் புயல் சின்னாபின்னமாக்கியது.

Cyclone Mandous who looted Kovalam and Pattinappakkam damage report

சென்னை பட்டினம்பாக்கத்தில் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.புயல் நேற்று கரையை கடந்த நிலையில் புயல் கரையை கடக்கும் போது கடற்கரையில் உள்ள மணல் அள்ளி வீச பட்டதால் பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டது.

கடற்கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் படகுகள் ஆகியவை முழுவதுமாக சேதமாகி இருக்கிறது என்றும் அது மட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த சிறு உணவகங்கள் மற்றும் கடைகள் ஆகியவைகளும் பலத்த சேதம் அடைந்து உள்ளன.

மீன் பிடிப்பதற்காக வலைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வலைகள் மீது முழுவதுமாக மணல் பரவி உள்ளன. இதனால் மீண்டும் அந்த வலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சுமார் எட்டடி உயரத்துக்கு அலைகள் எழுப்பின. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் மாண்டாஸ் புயலின் தாக்கத்தால் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் இருந்த மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது இந்த மரங்கள் ஆனது மாமண்டூரில் இருந்து மேல்மருவத்தூர் வரை சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே ஆங்காங்கே விழுந்து கிடந்தது அம்மரங்களை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மற்றும் மரம் அறுவை இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் இதனால் சுமார் ஆங்காங்கே 5 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

English summary
Shops set up in the coastal area of Kovalam have been destroyed by the heavy rains of Cyclone Mandous Pattinpakkam beach is completely damaged and covered with sand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X