அரபிக்கடலில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் - மிக மிக கனமழைக்கு வாய்ப்பு
அரபிக்கடல் பகுதியில் வரும் 14ஆம் தேதி உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 16ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
Recommended Video
அரபிக்கடல் பகுதியில் வரும் 14ஆம் தேதி உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 16ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக அரபிக்கடலில் புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலும் மழையும்
தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. 28ஆம் தேதி வரை கத்திரி வெயில் காலம் என்பதால் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கும் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. சொன்னது போலவே நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 16ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை, மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.

புயலாக மாற வாய்ப்பு
14ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. 15, 16ஆம் தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

சூறாவளி வீசும்
இன்று முதல் 16ஆம் தேதி வரைக்கும் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் லட்சத்தீவு, மலாத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications