தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் - எந்த பேருந்துகள் எங்கிருந்து செல்லும்
தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக 34,259 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். இந்த பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.

தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த ஆண்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 16,540 பேருந்துகளும், திரும்பி வர 17,719 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை மொத்தம் 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்
தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம் - திண்டிவனம், விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்
தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக இயக்கப்படும்.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, வேலூர்,ஆற்காடு,திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக இயக்கப்படும்
கே.கே நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.பி.படேல் ரோடு கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications