தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போகலாம்... 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 23 எக்ஸ்பிரஸ் ரயில்களை நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றின் காரணமாக, ரயில்களில் மட்டும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு இருக்கைகளாக இயக்கப்படுவதால், பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்கமுடியும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. கொரோனா படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 23 எக்ஸ்பிரஸ் ரயில்களை நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், நவம்பர் மாதம் தொடக்கத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் வழக்கமான ரயில்களின் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்தவகையில், முதற்கட்டமாக தெற்கு ரயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தற்போது முதல்கட்டமாக தெற்கு ரயில்வேயில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்களை முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் படிப்படியாக தெற்கு ரயில்வேயில் இயங்கும் அனைத்து ரயில்களையும் வழக்கமான ரயில் சேவைகளாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரி கூறியுள்ளார். விரைவில் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் ரயில்கள்:
வண்டி எண்:06850 ராமேஸ்வரம் - 06849 திருச்சி திருச்சி-ராமேஸ்வரம்
06089 எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, 06090 ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல்
06844 பாலக்காடு-திருச்சி , 06843 திருச்சி-பாலக்காடு
06366 நாகர்கோவில்-கோட்டயம், 06326 கோட்டயம்-நிலாம்பூர் சாலை, 06325 நிலாம்பூர் சாலை-கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.
06302 திருவனந்தபுரம்-சோரணூர் ,06301 சோரணூர்-திருவனந்தபுரம்
06308 கண்ணூர்-ஆலப்புழா , 06307 ஆலப்புழா-கண்ணூர்
02628 திருவனந்தபுரம்-திருச்சி , 02627 திருச்சி-திருவனந்தபுரம்
06305 எர்ணாகுளம்-கண்ணூர், 06306 கண்ணூர்-எர்ணாகுளம்
06607 கண்ணூர்-கோவை, 06608 கோவை-கண்ணூர்
06342 திருவனந்தபுரம்-குருவாயூர்,06341 குருவாயூர்-திருவனந்தபுரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.
06324 மங்களூரு-கோவை, 06323 கோவை-மங்களூரு , 06321 நாகர்கோவில்-கோவை , 06322 கோவை-நாகர்கோவில் (06322) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவம்பர் 10ஆம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications