"வலி அதிகமாக இருக்குமாம்".. அடி வாங்கியும் அடங்காத பாகிஸ்தான்.. மீண்டும் சீண்டிய அசீம் முனீர்
இஸ்லாமாபாத்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் நம் நாடு, பாகிஸ்தானை பந்தாடியது. ஆனாலும் கூட இனனும் பாகிஸ்தான் திருந்தவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் நம் நாட்டை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் சீண்டி உள்ளார். எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான பதிலடி வலி மிக்கதாக இருக்கும் என்று நம் நாட்டை மிரட்டி உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசீம் முனீர் இருக்கிறார். இவர் தொடர்ந்து நம் நாட்டை சீண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தொடர்ந்து திமிராக பேசி வருகிறார்.

இந்நிலையில் தான் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் பேசினார். அப்போது அவர் நம் நாட்டை சீண்டும் வகையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக அசீம் முனீர் பேசியதாவது:
திடீர் சம்பவம் இல்லை
"எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஏதாவது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் போர் சாதாரணமாக இருக்காது. மிகவும் விரைவான, ஆபத்தான அதேநேரத்தில நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அதுமட்டுமின்றி பதிலடி வலி மிக்கதாக இருக்கும். இதனை எதிரிகள் அறிந்து கொள்ள வேண்டும்.
அணுஆயுதங்கள் கொண்ட இருநாடுகள் இடையேயான மோதல் என்பது வழக்கமான போர் இல்லை.உண்மையில், இரு சித்தாந்தங்களுக்கிடையேயான ஒரு தீர்க்கமான போர். இதில், அல்லா அருளால் உண்மை வெற்றி பெற்றது. பொய் தோல்வியடைந்தது. இந்த போர் என்பது இந்தியாவின் திடீர் சம்பவம் இல்லை. திட்டமிடப்பட்ட ஒன்று.
வலி மிக்கதாக இருக்குமாம்
கடந்த காலங்களில் 2001, 2008, 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தவறான நடவடிக்கைகளின் மூலாக பாகிஸ்தான் மீது சட்டவிரோதமான போரை திணிக்க இந்தியா முயன்றது. குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியலால் இது நடந்தது. போலியான குற்றச்சாட்டுகள், மிகைப்படுத்தப்பட்ட பொய்கள், போலியான ஆக்கிரமிப்பு என்று சில தகவல்களை சொல்லி இது கட்டமைக்கப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிக வலியை கொடுக்கும் போராக மாறும்'' என்றார்.
வாங்கிய அடி போதாது போல..
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் இப்படி வாய்ச்சவடால் விடுவது ஒன்றும் புதிது அல்ல. தொடர்ந்து இதுபோன்று செய்து வருகிறார். முன்னதாக கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ விமானங்கள், ராணுவ தளம், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது. அதோடு பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த ரேடார்களை தாண்டி நம் நாட்டின் ஏவுகணைகளை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கியது.
மண்டியிட்ட பாகிஸ்தான்
இதனால் பயந்துபோன பாகிஸ்தான் நம்நாட்டை தாக்க முயன்றது. பாகிஸ்தானின் போர் விமானங்கள், டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் நம் நாடு பெரிய அளவில் சேதத்தை சந்திக்காத நிலையில் பாகிஸ்தான் கடும் சேதத்தை சந்தித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டின் ராணுவத்தை தொடர்பு கொண்டு நாங்கள் இனி தாக்கமாட்டோம். நீங்களும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கெஞ்சியது. இதையடுத்து தான் நம் நாடு தாக்குதலை நிறுத்தியது. இப்படி அடிவாங்கிய கெஞ்சிய இந்த அசீம் முனீர் தான் தற்போது மீண்டும் நம் நாட்டை சீண்டிஉள்ளார்.












Click it and Unblock the Notifications