சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளிக்கு 16540 சிறப்பு பேருந்து இயக்கம் - ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுத பூஜைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதே போல ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் இந்த பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.

Deepavali Special bus: 16,540 buses to operate from Chennai to out stations

பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. விறுவிறுப்பாக ஆன்லைனில் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

ஆயுதபூஜை விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு பேருந்துகளில் கூட்டநெரிசலை தவிர்க்க போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தடுக்க கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த பேருந்துகள், வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. இதன்படி, தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து பயணங்கள்.. மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து இருக்கும் தமிழகம்! பேருந்து பயணங்கள்.. மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து இருக்கும் தமிழகம்!

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோன்று, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

இதனிடையே தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் தங்கள் சொத்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அந்த சமயம் சிறப்பு பேருந்துகள் பல இயக்கப்படுவது வழக்கம். இது குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் செயல்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திரும்புவதற்காக 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகண்ணப்பன் பேட்டி

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 1, 2,3 தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 3506 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக 5, 6, 7, 8 தேதி வரையில் தினசரி இயங்கக்கூடிய 2100 பேர் இந்துக்களுடன் 4,319 சிறப்பு பேருந்துகளும் ஏனைய முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கு வசதியாக மாதவரம் பேருந்து நிலையம் கேகே நகர் பேருந்து நிலையம் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் பூந்தமல்லி பேருந்து நிலையம் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு என ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி நசரத்பேட்டை வழியாக வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும். பொதுமக்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 கவுண்டர்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்கள் என மொத்தம் 12 கவுண்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் இதனை தடுக்க பொதுமக்கள் புகார் அளிக்க கூடிய வகையில் toll-free 1800 425 6151, 044 24749002 எண்களும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.

English summary
According to the Tamil Nadu Transport Corporation, 16,540 special buses will be operated from Chennai and other cities to celebrate Deepavali in the hometown. The Tamil Nadu government has announced that these special buses will be operational from November 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X