சேகர்பாபு, மேயர் பிரியா முன்னிலையில் விஜய் குறித்து அவதூறு.. கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியின் 95-வது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் சென்னையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று நடைபெற்ற திமுக மகளிர் அணி கூட்டத்தில், தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் விழா ஏற்பாட்டாளர் முரளிஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சியின் எம்பி கனிமொழி கருணாநிதி, சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளன், முதல்வர் விஜய்யை ஒருமையிலும் தரக்குறைவாகவும் விமர்சித்துப் பேசியிருந்ததாக கூறப்படுகிறது.

Defamatory remarks against Chief Minister Vijay Case filed against DMK Councilor Sudha Deenadayalan

கவுன்சிலர் பேசியதைக் கேட்டு மேயர் பிரியா மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சிரித்ததாக கூறப்படுகிறது. எனினும் அருகில் இருந்த எம்பி கனிமொழி மட்டும் முகம் சுழித்ததாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியானது. இந்த வீடியோவை பார்த்த தவெக நிர்வாகி உதயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கூட்டத்தை ஏற்பாடு செய்த முரளிதரன் மற்றும் அவதூறாகப் பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளன் ஆகிய இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், " சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் மாவட்டம், B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் இன்று (19.10.2026) திரு.உதயகுமார், த.வெ.க. துறைமுக பகுதி செயலாளர் என்பவர் ஆஜராகி கொடுத்த புகார் மனுவில், கடந்த 07.10.2026 அன்று மாலை இராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா துறைமுக பகுதி செயலாளர் முரளி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்விழாவில் தி.மு.க.வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை தலைமை ஏற்று உரையாற்றிய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க 95வது வட்ட கவுன்சிலர் திருமதி.சுதா தீனதயாளன் என்பவர் பேசும்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இரு தரப்பினரிடையே பிரச்சனை உண்டாக்கும் நோக்கத்திலும், பொது மக்களிடையே பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளார் என்றும், மேற்படி சுதா தீனதயாளன் மற்றும் இவ்விழாவை ஏற்பாடு செய்த திரு.முரளி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு.உதயகுமார் என்பவர் புகார் கொடுத்ததின்பேரில், B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு புலன் விசாரணையில் உள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+