சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிபதி லோயா மர்ம மரணம்... நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம்... ஜனநாயகத் துரோகம்- சீமான் சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் ஜனநாயக துரோகத்தை மத்திய பாஜக அரசு செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

டெல்லி வன்முறை வழக்குகளை விசாரித்து பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர். தமிழரான நீதிபதி முரளிதர் இந்த உத்தரவு பிறப்பித்த சில மணிநேரங்களிலேயே பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

Delhi violence: Seeman condemns transfer of Justice S Muralidhar

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாகவும் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:

டெல்லியில் நடந்த அறவழிப் போராட்டத்தை கலவரமாக மாற்றிய மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் ஆட்சியாளர்களின் மதத்துவேசப் பேச்சையும் கண்டித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்கள் ஒரே இரவில் வேறு மாநிலத்திற்குப் பந்தாடப்படுவது இந்தியாவின் உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நீதித்துறையின் மீது கல்லெறியும் கொடுஞ்செயலாகும்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தன்னாட்சி அமைப்புகளின் தன்னுரிமையைப் பறித்து பாசிசம் தலைவிரித்தாடும் தற்காலச் சூழலில் சனநாயகத்தைக் காப்பாற்ற சட்டமன்றம், பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் மேலாதிக்க அமைப்பாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஹே. தஹில் ரமானி அரசியல் இடையூறு காரணமாகப் பதவி விலகுவதும், மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்து போவதும், தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம் செய்யப்படுவதுமான செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத் துரோகம்.

இவ்வாறு சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar Party Chief Seeman has condemned that the transfer of Justice S Muralidhar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X