விஜய் போட்ட பிளான்.. தவெக பக்கமே பந்தை திருப்பிவிட்ட திமுக.. எம்.பிக்கள் மீட்டிங்கின் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக, பாஜக உடன் இணக்கம் காட்டுகிறது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை திறம்படக் கையாண்டு பந்தை தவெக கோர்ட்டுக்கே திருப்பியுள்ளது திமுக.

தொகுதி மறுவரையறை மசோதா வந்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, மநீம, பாமக ஆகிய கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.

dmk aiadmk Delimitation vijay tvk

தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளு​மன்ற மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் பாஜக தலைமையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி பெரும்​பான்​மை​யுடன் இருந்​தா​லும், தொகுதி மறு​வரையறை உள்​ளிட்ட அரசியலமைப்புத் திருத்த மசோ​தாக்​களை நிறை​வேற்​றும் போது இந்​திய அரசி​யலமைப்​பின் 369-வது பிரி​வின் கீழ் ஒட்டுமொத்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்​களின் ஆதரவு தேவை.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறு​வரையறை மசோதா கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற நாடாளு​மன்​றக் கூட்​டத் தொடரில் தோல்வி அடைந்​தது. இந்நிலை​யில், இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக நிபந்தனை

தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற அதிக எம்.பிக்களை கொண்ட திமுகவின் உதவியை பாஜக நாடுகிறது. தொகுதி மறுவரையறைக்கு திமுக எதிரானதல்ல என்றும், அந்த நடவடிக்கை நியாயமான முறையில் அமைய வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம் என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்களை 50% அளவுக்கு உயர்த்தும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்த விவரப் பட்டியலையும் முன்பே கோரியுள்ளது திமுக. தொகுதி மறுவரையறை மசோதா அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்பட்ட பின்னரே, அதனை ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவை எடுப்போம் என்ற நிலைப்பாட்டில் திமுக உள்ளது.

விஜய் கூட்டிய கூட்டம்

மக்களவைத் தொகுதி மறுவரையறை, தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு, மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறையால் அரசியல் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பின்னணி என்ன?

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக, பாஜக உடன் நெருக்கம் காட்டுவதாக தகவல் வந்ததுமே, இந்தக் கூட்டத்தைக் கூட்டும் முடிவை எடுத்து விட்டாராம் விஜய். பாஜகவுடன் நெருக்கம் காட்டும் கட்சிகளை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காகவே விஜய் இந்தக் கூட்டத்தை நடத்தி உள்ளார் என்கின்றனர்.

ஆனால், மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்டினால், தொகுதி மறுவரையறை மசோதா பற்றிய எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று நிபந்தனை வைத்தது திமுக. காவிரி விவகாரம் தான் உயிராதாரப் பிரச்சனை, அதை முதலில் தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்தது திமுக. இதன் மூலம் பந்தை தவெக கோர்ட்டுக்கே தள்ளிவிட்டது திமுக.

திமுக ஸ்மார்ட் மூவ்

எனினும், திட்டமிட்டபடி, முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீமவைச் சேர்ந்த 37 எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கா விட்டால், அக்கட்சி பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த நினைத்தது தவெக. ஆனால், மேகதாது பற்றி விவாதிக்க முதலில் கூட்டத்தைக் கூட்டுங்கள். அதனை கூட்டினால், தொகுதி மறுவரையறை பற்றி ஆலோசிக்கும்போது வருவோம் எனக் கூறி செக் வைத்தது திமுக.

மேலும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த மறுவரையறை மசோதா கூட்டத்தில் பங்கேறாமல் புறக்கணித்ததால், இது அனைத்துக் கட்சி கூட்டமாக இல்லாமல் தவெக கூட்டணி எம்.பிக்கள் கூட்டமாகவே நடந்து முடிந்துள்ளது. திமுகவை கார்னர் செய்ய விஜய் போட்ட திட்டம் எடுபடவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+