‘4 கட்டம்’ 22ஆம் தேதி என்ன நடக்குதுனு பாருங்க! திடீரென களத்தில் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், திமுகவுடன் கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். பல கட்சிகளின் சார்பில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணசாமி அறிவிப்பு
அந்த வகையில், மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசினார். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முழு முடக்கத்திற்கு பிறகு தற்போதுதான் பொருளாதாரம் மெல்ல முன்னேறி வருகிறது.

மின்கட்டண உயர்வு - ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் வாரம் ஒருமுறை என போராட்டங்கள் நடைபெறும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வகையில் 4 கட்ட போராட்டங்கள் நடைபெறும்.

பெரிய அளவில் சதி
தென் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது. எங்களின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க பெரிய அளவில் சதி நடைபெறுகிறது. இவற்றை தடுக்க டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளோம். மேலும், இமானுவேல் சேகரன் நினைவு இடத்தை பராமரிக்கும் பொறுப்பு மற்றும் விழா நடைபெறும் பொறுப்பு ஆகியவற்றை புதிய தமிழகம் கட்சிக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மீது குற்றச்சாட்டு
மக்களுடைய நேரடி பயன்பாட்டுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை. சொன்னவை எவையும் நடக்கவில்லை. மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறினால், ஆட்சியை எங்களால் நடத்த முடியவில்லை எனக் கூறி, ஆளும் திமுக அரசு, ஆட்சியை விட்டு விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications