இதுதான் ஜனநாயகம்.. இதுதான் தமிழ்நாடு.. அதிகாலையே வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சூப்பர் சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில் அதிகாலையே வாக்குச்சாவடி மையங்களில் வயதானவர்கள் பலரும் நேரடியாக வந்து வாக்களித்தனர். இளைஞர்கள் வரும் முன் முதல் ஆளாக வாக்குச்சாவடி மையங்களில் வயதானவர்கள் பலரும் வாக்களித்துள்ளனர்.
வயதானவர்களுக்கு தபால் வாக்குகள் இருந்தும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று வயதானவர்கள் நேரில் வந்து வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களிடையே நிலவும் இந்த வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதற்காக ஏற்கனவே 12டி பார்ம் வழங்கப்பட்டது. இந்த பார்ம் கடந்த மாதம் சென்னை மக்களிடையே வழங்கப்பட்டு அதில் விருப்பம் உள்ளவர்களின் பெயர்கள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் 4 ஆயிரத்து 175 முதியவர்கள் இதில் விண்ணப்பம் செய்தனர். அதேபோல் விண்ணப்பம் செய்த மாற்றுத்திறனாளிகள் 363 பேரும் இதில் தேர்ச்சி பெற்றனர். தபால் மூலம் வாக்களிக்க இவர்கள் தேர்வானார்கள்.
அசத்தல்: இந்த நிலையில்தான் சென்னையில் தபால் வாக்கெடுப்பு கடந்த 8ம் தேதி தொடங்கியது. கடந்த 13ம் தேதி வரை தபால் வாக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடந்தது . சென்னையில் மட்டும் இதற்காக 65 குழுக்கள் இவர்களின் வீடுகளுக்கு சென்றனர். முறையான பாதுகாப்புடன், இவர்களின் வாக்குகளை பெற்றனர். ஒரு குழுவிற்கு 4 பேர் என்று கிட்டத்தட்ட 250 பேர் வாக்குகளை பெற்றனர்.
மற்ற மாவட்டங்களில் இதேபோல் தபால் வாக்குகள் பெறப்பட்டது. வயதானவர்களுக்கு தபால் வாக்குகள் இருந்தும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று வயதானவர்கள் நேரில் வந்து வாக்களித்துள்ளனர்.
தேர்தல்: 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலோடு எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.
மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications