சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜஸ்ட் பாஸ்... நூலிழையில் தப்பித்த 5 பேர்... ஓட்டு வித்தியாசம் இவ்வளவுதான்.. இதில் இவரும் ஒருவர்..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் ஓட்டு, ஐநூறு ஓட்டுக்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் 5 பேர் திரில்லிங் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

அந்த 5 பேரில் அரைநூற்றாண்டு கால பொதுவாழ்க்கைக்கு சொந்தக் காரரான துரைமுருகனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவெல்லாம் திக்திக்.. டக்குன கைவிட்ட இரவெல்லாம் திக்திக்.. டக்குன கைவிட்ட "சாதி".. அல்லாடவிட்ட காட்பாடி.. இப்டியா ஜெயிக்கணும் துரைமுருகன்

ஓட்டு வித்தியாசம் கொஞ்சம் மாறியிருந்தாலும் கூட அதிமுகவிடம் 5 தொகுதிகளை பறிகொடுக்க வேண்டிய சூழல் திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும்.

திரில்லிங்

திரில்லிங்

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய நேற்று காலை முதலே, குறிப்பிட்ட 10 தொகுதிகளில் மட்டும் சினிமா பட பாணியில் திரில்லிங், சேசிங், என முடிவுகள் மாறி மாறி வெளியாகின. ஒரு சுற்றில் திமுக முன்னேறுவதும் மற்றொரு சுற்றில் அதிமுக முன்னேறுவதும் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தவர்களை புருவம் உயர்த்த வைத்தது.

லீடிங்

லீடிங்

தேனி மாவட்டம் போடியில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடுமையாக போட்டியை கொடுத்தார் திமுகவின் தங்க.தமிழ்ச்செல்வன். ஒரு கட்டத்தில் இரண்டு, மூன்று சுற்றுக்களில் ஓ.பி.எஸ். பின்னடைவையும் சந்தித்தார். பிறகு நேரம் கூட கூட அடுத்தடுத்த சுற்றுக்களில் லீடிங் எடுத்து வெற்றிபெற்றார். இதனிடையே இ.பி.எஸ். ஒரு லட்சத்துக்கும் நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும், ஓ.பி.எஸ். தரப்பு தடுமாறியதும் அதிமுகவில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

அரைநூற்றாண்டு

அரைநூற்றாண்டு

அதிமுகவில் இந்தக் கதை என்றால் திமுகவில் அதை விட பரிதாபமான நிகழ்வு ஒன்று நடந்தது. அதாவது கருணாநிதியுடன் இணைந்து அரைநூற்றாண்டு காலம் அரசியல் செய்தவரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு மிக மிக கடுமையான போட்டியை கொடுத்தார் அதிமுகவின் புதுமுக வேட்பாளர் ராமு. இன்னும் சொல்லப்போனால் நேற்று மாலை வரை துரைமுருகனின் வெற்றி கேள்விக்குறியாகவே இருந்தது. பிறகு அடுத்தடுத்த சுற்றுக்களில் கரையேறி வெறும் 746 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

குறைவான ஓட்டு

குறைவான ஓட்டு

இவர்கள் கதை இப்படியென்றால் சென்னை தியாகராயர் நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் சத்யாவை தோற்கடித்துள்ளார். தமிழகத்திலேயே மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையை இவர் அடைகிறார்.

ஜஸ்ட் பாஸ்

ஜஸ்ட் பாஸ்

இதேபோல் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் 977 ஓட்டுக்களில் பாமக வேட்பாளரை தோற்கடித்தார். இவர்களை போலவே கடைசிவரை திணறிய தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் வெறும் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியுள்ளார். மேலும், விருத்தாசலம் தொகுதியில் 862 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன்.

English summary
Details of winners by a narrow margin in Tamil Nadu assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X