சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

FIRக்கு எஸ்பி அனுமதி தேவையில்லை.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை : கடத்தல் விவகாரங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பதற்றமான விவகாரங்களில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடத்தல் விவகாரங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வதற்கு எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை. இக்கட்டான சூழ்நிலைகளில் காவல்துறையே விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளார்.

தென்காசி அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை தாக்கிவிட்டு, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தில் உயரதிகாரிகள் அனுமதி வழங்காததால் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்தே டிஜிபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை..பதுங்கிய ரவுடிகள்..போன் சிக்னல் மூலம் கொத்தாக பிடிக்க டிஜிபி ஆர்டர் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை..பதுங்கிய ரவுடிகள்..போன் சிக்னல் மூலம் கொத்தாக பிடிக்க டிஜிபி ஆர்டர்

 டிஜிபி உத்தரவு

டிஜிபி உத்தரவு

கடத்தல் விவகாரங்களில் எஸ்.பிக்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதிலும், நடவடிக்கை எடுப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியே துரிதமாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும், எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.பி - டிஎஸ்பி

எஸ்.பி - டிஎஸ்பி

இதுகுறித்து அவர், காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "தென்காசியில் திருமணமான பெண்ணை கடத்தி, அவரது கணவரை தாக்கிய விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டும் சம்மந்தப்பட்ட ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப் பதிவு செய்ய டி.எஸ்பி, எஸ்.பியிடம் மூன்று முறை அனுமதி கேட்டும், அனுமதி வழங்கப்படவில்லை.

காவல்துறைக்கு அவப்பெயர்

காவல்துறைக்கு அவப்பெயர்

மேலும் இதுதொடர்பான வீடியோ பரவும் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற அலட்சியமான எஸ்.பியின் நடவடிக்கை, காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. பதற்றமான இச்சம்பவத்தில் காவல்துறை எஸ்.பியின் நடவடிக்கையின்மை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்பி அனுமதி தேவையில்லை

எஸ்பி அனுமதி தேவையில்லை

எனவே அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பதற்றமான சம்பவங்களில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு, எஸ்.பி.க்களின் அனுமதி தேவையில்லை". என டிஜிபி சைலேந்திரபாபு தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DGP Sylendra Babu has ordered that SPs' permission is not required to register FIRs in kidnap cases. Police DGP has issued a circular to the police officials asking them to take immediate and appropriate action in cases of tension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X