தனத்திரயோதசி: இந்த ஒரு பொருளை வைத்து பூஜை செய்தால்..ஏழு ஜென்மத்திற்கும் செல்வம் பெருகுமாம்!
சென்னை: தனத்திரயோதசி, தந்தேரஸ் நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்ய செய்ய நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளது. குபேர லட்சுமி பூஜை செய்ய தேவையானவை என்னென்ன என்றும் பார்க்கலாம்.
வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் முடிந்து விடுகிறது. தன திரயோதசி, தீபாவளி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். நாளைய தினம் தனத்திரயோதசி, தன்வந்திரி பகவானை வணங்கி பூஜை செய்ய நல்ல நாள்.
தனத்திரயோதசி நாளில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.எனவே அந்த விளக்கு எமதீபம் என்று அழைக்கப்படுகிறது. தந்தேஸ் எனப்படும் தனத்திரயோதசி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்ய வீட்டில் செல்வ வளம் பெருகும். அக்ஷய திரிதியை நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதே போல ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் திரயோதசி தனத்திரயோதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்களும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தந்தேரஸ்' என வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் 23, 2022 ஞாயிற்றுக்கிழமை தந்தேரஸ் எனப்படும் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது.

மகாலட்சுமி அருள்
பாற்கடலில் இருந்து அமிர்தம் வேண்டி கடைந்த போது அனைத்து செல்வங்களுடன் லட்சுமி தேவி அவதரித்தார். தனதிரயோதசி நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும். பங்குச்சந்தைகளிலும் முதலீடுகள் செய்யலாம். வீட்டில் வரவு செலவு கணக்கை முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். தன திரயோதசி நாளிலும் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும்.

யம ராஜன் மகிழ்ச்சி
தன திரயோதசி தினத்தில்தான் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள்.
இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன. ஞாயிற்றுக்கிழமை பிரதோச நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட யம பயம் போகும்.

பூஜை செய்ய நல்ல நேரம்
அக்டோபர் 23, 2023 தன திரயோதசி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நாள். இந்த ஆண்டு லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நாள் அக்டோபர் 23, 2022. தன திரயோதசி மாலை 6.08 மணி முதல் 8.25 மணி வரை நல்ல நேரமாகும். தனத்திரயோதசி நாளில் கஸ்தூரி மஞ்சள் வைத்து பூஜை செய்து வழிபட்டு தீபாவளி நாளில் மகாலட்சுமி பூஜை செய்து அந்த மஞ்சளில் நமது பணம் வைத்து புழங்கும் பீரோவில் வைக்க ஏழு ஜென்மத்திற்கும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

வீட்டு உபயோகப் பொருட்கள்
இந்த நாளில் தங்கம் வெள்ளி வாங்குவது சிறப்பு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்க முடியாதவர்கள் கல் உப்பு, மஞ்சள், பச்சரிசி, சர்க்கரை, கஸ்தூரி மஞ்சள் நவதானியங்கள் வாங்க வேண்டும். அரிசி அல்லது நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை போன்ற நவதானியங்களை வாங்கலாம்.
வெள்ளிப்பாத்திரம் வாங்க முடியாதவர்கள் எவர்சில்வர் பாத்திரம் வாங்கலாம், லட்சுமி குபேர பூஜைக்கு தேவையான பச்சை குங்குமம், பச்சை கயிறு லட்சுமி குபேரர் காசுகள், லட்சுமி குபேரர் சிலை அல்லது படம் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும்.

தன்வந்திரி ஜெயந்தி
தனத்திரயோதசி தன்வந்திரி திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. மருத்துவக் கடவுள் எனப்படும் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும். நோய்கள், அகால மரணம், சூன்ய மரணம் ஏற்படாமல் தடுக்க தன்வந்திரி திரயோதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நல்ல நாளில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும். தன்வந்திரி அவதாரம் தீபாவளி அமாவாசைக்கு முன்தினம் வருகின்ற இந்த நாளில் தேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி தோன்றினார். நோய்கள் நீங்கவும், அகால மரணங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் தனத்திரயோதசி நாளில் தன்வந்திரி பகவானை வணங்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications