அறிக்கை தயாரா தம்பிகளா.. தமிழக உரிமை சார்ந்த பிரச்சனைகள்.. கையில் எடுக்க நடிகர் தனுஷ் திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக உரிமை சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக விரைவில் நடிகர் தனுஷ் பேசத் தொடங்குவார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தொகுதி வாரியாக தனுஷ் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ள சூழலில், அடுத்தக் கட்டமாக அரசியல் பிரச்சனைகள் குறித்து கருத்து மட்டும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மாவட்ட வாரியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்ற நிகழ்ச்சிக்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.

Dhanush Vijay TVK

அதேபோல் பெண்களுக்கு பட்டு சேலையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் உச்சமாக தான் தனுஷின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரசிகர் மன்றம் சார்பாக ஏராளமானோருக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தனுஷின் அலுவலகத்தில் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சிகளை இயக்குநர்கள் வெற்றி மாறன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இயக்குநர் சுப்ரமணியம் சிவா இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். தனுஷின் இந்த நகர்வு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. விஜய்யை தொடர்ந்து தனுஷும் அரசியலுக்கு வருகிறாரா என்ற விவாதத்தை ஏற்படுத்தியது.

இப்படியான சூழலில் தான் தனுஷ் தரப்பில் கோவை மாவட்டம் சட்டசபை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், மேட்டுபாளையம் ஆகிய தொகுதிகளில் அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தனுஷ் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்துவிட்டார் என்றே பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் நடிகர் தனுஷின் மேடை பேச்சுகள் கூடுதல் கவனம் பெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் தனுஷ் அடுத்தக் கட்டமாக தமிழக உரிமைகள் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக பேசவும், அறிக்கைகள் வெளியிடவும் தயாராகி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை வெடிக்கும் போது நடிகர் தனுஷ் போராட்டக் களம் வரவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+