தனுஷ் வந்து ஆட்டத்தையே காலி பண்ணிட்டாரு! பெரும் அச்சத்தில் விஜய்! இப்படி ஒரு கணக்கு இருக்கா!
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷும் தீவிர அரசியலில் குதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
குறிப்பாக, தனது நற்பணி மன்றத்தை 'தனுஷ் நற்பணி இயக்கம்' என்று பெயர் மாற்றி, அண்மையில் சென்னையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் தனுஷ். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தவெக வட்டாரத்தில் ஒருவித அமைதியற்ற பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"அந்த 35% வாக்கு எங்கள் சொந்த பலம் மட்டுமல்ல!"
தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் இதுபற்றி பகிரப்படும் கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாகக் கூறப்படும் கருத்து இதுதான்:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக பெற்ற 35 சதவீத வாக்குகள் முழுக்க முழுக்க கட்சியின் சொந்த பலத்தினால் அல்லது நமது ரசிகர்களால் மட்டுமே கிடைத்தது அல்ல என்கிறார்கள் அக்கட்சியினர்.
சினிமா நடிகர் என்பதால் மற்ற நடிகர்களின் தீவிர ரசிகர்களும் நமக்கு வாக்களித்ததால்தான் அந்த எண்ணிக்கையை எட்ட முடிந்தது. எனவே, தனுஷ் தீவிர அரசியலுக்கு வந்தால் அது நமக்குத்தான் நேரடி இழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதாவது சினிமா மோக வாக்குகள் பிரியும் என்கிறார்கள்.
இதன் மூலம், மாற்று நடிகர்களின் ஆதரவாளர்கள் தங்களுக்குத் தந்த வாக்குகள்தான் தங்கள் வெற்றியில் பெரிய பங்கு வகித்தது என்பதை தவெக உள்வட்டாரங்கள் வெளிப்படையாக உணரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
நேரடிப் போட்டிதான் நமக்கு லாபம்: தவெகவின் தேர்தல் கணக்கு
தவெக நிர்வாகிகள் முன்வைக்கும் மற்றொரு முக்கிய வாதம் என்னவென்றால், தேர்தல் களம் தவெக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான நேரடிப் போட்டியாக இருக்கும் வரை மட்டுமே தங்களுக்கு முழு அனுகூலமாக இருக்கும் என்பதாகும்.
"திமுகவிற்கும் நமக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும்போது மக்கள் மிகத் தெளிவாக முடிவெடுப்பார்கள். ஆனால், இடையில் மற்றொரு பிரபலம் புதிதாகக் களத்தில் இறங்கி வாக்குகளைப் பிரித்தால், அது திமுகவை விட தவெகவிற்குத்தான் அதிக சேதத்தை உண்டாக்கும். வாக்குகள் சிதறும்போது அது நம் வெற்றி வாய்ப்பை பலவீனப்படுத்தும்" என்று கட்சி வட்டாரங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.
"ஸ்டாலின், எடப்பாடிக்கு இடையே விஜய் தனித்துவமாகத் தெரிந்தார்"
களத்தில் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டுமே நின்றபோது, சினிமாவில் இருந்து வந்த புதிய முகமாக விஜய் மக்கள் மத்தியில் தனித்து நின்றார். இதனால், பழைய முகங்களை வேண்டாம் என்று நினைத்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூட்டம் எளிதாக விஜய் பக்கம் திரும்பியது.
ஆனால், அதே சினிமாத் துறையில் இருந்து மக்கள் செல்வாக்கு பெற்ற தனுஷ் போன்ற இன்னொரு இளம் நட்சத்திரமும் தேர்தல் களத்திற்கு வந்தால், விஜய் பெற்றிருந்த அந்த தனித்துவமான ஈர்ப்பு மங்கிவிடும் என்ற அச்சம் தவெக-விற்குள் எழுந்துள்ளது. அதோடு விஜய் இனி நடிக்க மாட்டார். ஆனால் தனுஷ் அரசியல் வசனம் பேசலாம். நடிக்கலாம். அதனால் அவர் இன்னும் பலரை விஜய்யை விட அதிகமாக சென்ற சேர முடியும்.
தனுஷின் ஆதரவு பலமும், டெல்லி பின்னணியும்!
தனுஷின் அரசியல் வருகையை தவெக சாதாரணமாகக் கருதாததற்கு வேறு சில வலுவான காரணங்களும் உள்ளன: தமிழகத்தின் தலித் மற்றும் பட்டியலின இளைஞர்கள் மத்தியில் தனுஷுக்கு வலுவான செல்வாக்கும் ரசிகர் பட்டாளமும் உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல, தனுஷின் பின்னணியில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு இருப்பதாக சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
அண்மையில் நடந்த மகளிர் அணி சந்திப்பில் திரண்ட கூட்டமே இதற்கு சாட்சி; அவரால் எளிதாக பெருங்கூட்டத்தைக் கூட்ட முடிகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
தேர்தல் களம் பலமுனைப் போட்டியாக மாறினால், தவெகவின் வாக்கு வங்கியில் பெரும் பிளவு ஏற்படும் என்பதே அக்கட்சி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. தனுஷ் அதிகாரப்பூர்வமாக எப்போது கட்சியை அறிவிப்பார், தேர்தல் களம் எப்படி மாறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
