அவிழ்ந்த வேட்டியை ஒரு கையில் எடுத்துக்கொண்டு.. உருட்டுக் கட்டையால்.. ஓபிஎஸ் ஆதரவாளர் அட்டகாசம்!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களில் ஒருவர் அவிழ்ந்துபோன தனது வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு உருட்டுக்கட்டையால் எடப்பாடி பழனிசாமி படம் இடம்பெற்ற பேனரை கிழிக்க முயன்றார்.
Recommended Video
சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கும் நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து உடைத்து உள்ளே சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் அவ்வை சண்முகம் சாலை பகுதியே போர்க்களமாக காட்சி தருகிறது.
ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழகத்தின் உள்ளே நுழைந்து, பேனர்களில் இடம்பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்தனர். அலுவலகத்திற்குள்ளும் புகுந்த ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர்கள்அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர்.
ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் அவிழ்ந்துபோன தனது வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு உருட்டுக்கட்டையால் எடப்பாடி பழனிசாமி படம் இடம்பெற்ற பேனரை கிழிக்க முயன்றார். அப்போது ஓடிவந்த நிர்வாகிகள் சிலர், அவரை கண்டித்து, கிழிக்க வேண்டாம் எனக் கூறி அங்கிருந்து அவரை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications