பாரதி பாஸ்கரா இப்படி பேசியது.. அதுவும் அறிவாளி.. "காவி ஆர்எஸ்எஸ்" வெச்ச குறி.. சீறும் டாக்டர் ஷாலினி
பாரதி பாஸ்கரின் பேட்டி ஒன்றிற்கு டாக்டர் ஷாலினி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "தமிழ் இலக்கியம் என்பதே பக்தி இலக்கியம்தான்" என்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசிய பேச்சு, சோஷியல் மீடியாவில் விவாதமாக வெடித்து வருகிறது.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்.. தன்னுடைய சுவாரஸ்யமான பேச்சுகளால் தமிழக மக்களை கவர்ந்தவர்.. கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ முடித்துள்ளார்.
ஒரு வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், இவரது பேச்சின் மீதுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து பட்டிமன்ற மேடைகளில் பேசி வருகிறார்.. குறிப்பாக, பட்டிமன்ற ராஜாவுக்கும், பாரதி பாஸ்கருக்கும் நடக்கும் கருத்து போட்டிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

சாணக்யா
எந்த பட்டிமன்ற பேச்சிலும், பெரும்பாலும் பாரதியை மட்டுமே முன்னிலைப்படுத்தி பேசிவருபவர் பாரதிபாஸ்கர்.. இவர் சமீபத்தில் சாணக்யா என்ற யூடியூப் சேனலுக்கு தந்த பேட்டியில், "தமிழ் இலக்கியம் என்பதே பக்தி இலக்கியம்தான்.. பக்தி கலந்ததுதான் தமிழ்" என்று கூறியுள்ளார்.. இதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் விவாதமாக வெடித்துள்ளது.. இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.. அந்தவகையில் மனநல மருத்துவர் ஷாலினியும் ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

பர்வீன் சுல்தானா
"பாரதி பாஸ்கர் மீது நிறைய மரியாதை உண்டு.. என்கிட்ட நிறைய பெண்கள் என்ன சொல்வாங்க தெரியுமா? "நிறைய கஷ்டங்கள் இருந்தது மேடம், அதையெல்லாம் போக்கியது பாரதி பாஸ்கர் மேடம், பர்வீன் சுல்தானா மேடம், நீங்க" என்று 3 பேரையும் சொல்வார்கள்.. உங்களுடைய பேச்சுக்களை எல்லாம் கேட்டுதான் நான் தைரியத்தை வரவழைத்து கொண்டேன்.. அதற்கு பிறகுதான் இந்த பிரச்சனைகளை கையாண்டேன் என்பார்கள்.. அதன்படி பார்த்தால், 3 பெண்களுமே வேறு வேறு துறையை சேர்ந்தவர்கள்..

பிராமண பெண்
ஆனால் பொதுவாக கஷ்டத்தில் இருக்கும் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், இவர்கள் எல்லாம் நம் மன உறுதியை, மன வலிமையை அதிகப்படுத்தி தரக்கூடிய பெண் ஆளுமைகள் என்று நினைக்கிறார்கள்.. தமிழை பற்றி பேசுவது நல்ல விஷயம்தான்.. யார் வேண்டுமானாலும் தமிழை பற்றி பேசலாம்.. ஆனால், சமஸ்கிருதத்தை பற்றி இப்போது யாரும் பேச முடியாது.. வேதத்தில் இருக்கும் பக்தியை கூட பேச முடியாது.. பிராமண பெண்ணாக இருந்தாலும் வேதத்தை பேச முடியாது.. ஏனென்றால் வேதத்தை பிராமண பெண்களே படிக்க முடியாது.. காரணம், அதை பெண்களிடமும் மறைத்துதான் வைத்திருப்பார்கள்.

பாரதி பாஸ்கர் சுளீர்
ஆனால், தமிழ் அப்படி இல்லை.. ஓபன் சோர்ஸ்.. யார் வேண்டுமானாலும் பேசினாலும்.. படிக்கலாம்.. இங்கு ஒரு சங்கடம் என்னவென்றால், தமிழுக்கு அமுதென்று பெயர் என்று எழுதிய பாரதிதாசன் ஒரு நாத்திகர்.. அவர் சொன்னதில் இருந்து ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி, தமிழுக்கு பக்தி என்று பெயர் என்கிறார் பாரதி பாஸ்கர்.. பக்தி என்பதே தமிழில் தோன்றியது என்பது இது எவ்வளவு பெரிய முரண்பாடு? பக்தி இயக்கம் உருவாகியதும் தமிழ்நாடுதான்.. திராவிட தேசத்தில்தான், காவிரி கரையில், நம்மாழ்வார் உருவாக்கினார் என்று குறிப்பு உள்ளது.. அதற்கு முன்பு காரைக்கால் அம்மையார் போன்றோர் உருவாக்கினார்கள்..

பாரதிதாசன்
ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் ஒன்றை சொல்ல வேண்டும்.., பக்தி தமிழ்நாட்டில்தான் தோன்றியது, ஆனால், பக்தி என்ற சொல் தமிழ் கிடையாது.. இப்போது, பக்திதான் தமிழ் இலக்கியம் என்பதை மட்டும் பெரிதாக்கி காட்ட வேண்டிய உள்நோக்கம் என்ன? ஆர்எஸ்எஸ் என்ன செய்கிறதென்றால், நமக்கு பிடித்த மனிதர்களை பிடித்து வைத்துக் கொண்டு, சில வார்த்தைகளை சொல்ல வைக்கிறார்கள்.. இதுவும் ஆர்எஸ்எஸ் சதியாக இருக்கலாம்.. சம்பந்தமே இல்லாமல் பாரதிதாசன் வரிகளை எடுத்து வைத்து கொண்டு, "தமிழுக்கு நேராக பக்தி" என்று எழுதினால் என்ன அர்த்தம்?

பூதாகரம்
தமிழ் இலக்கியத்தில் காதல் இல்லையா? வீரம் இல்லையா? ஆன்மீகம் இல்லையா? மனித உணர்வு, இலக்கியம், மருத்துவம் போன்றவற்றை தமிழ் இலக்கியம் வர்ணிக்கவில்லையா? ஏன் பக்தி மட்டும் இவருக்கு கண்ணில் படுகிறது? மற்ற விஷயங்கள் ஏன் தெரியவில்லை? அல்லது இவர் அவைகளை தேடவில்லையா? பக்தியை பூதாகரப்படுத்தி காட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? உங்களை யார் அப்படி சொல்ல சொன்னார்கள்? பக்திதான் நம் நாட்டில் காலம் காலமாக இருந்து வருகிறதே.. திடீர்னு ஏன் இதை பற்றி பேச வேண்டும்?

பாரதி பாஸ்கர்
ஏனென்றால் அது பொருள்படுத்தப்பட வேண்டும்.. ஏன் பொருள்படுத்தப்பட வேண்டும் என்றால், அது ஓட்டாக மாற்றப்பட வேண்டும்.. யாருக்கு ஓட்டாக மாற்றப்பட வேண்டும் என்றால், ஆர்எஸ்எஸுக்கு ஓட்டாக மாற்றப்பட வேண்டும்.. ஆர்எஸ்எஸ்ஸின் சாவர்க்கர் பக்திமானா? இறைமறுப்பாளர்தானே?.. பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர் என்பதால், அவரால் ஒருநாள் முழுக்க தமிழ் இலக்கியம் பற்றி பேச முடியும்.. அதேசமயம், தமிழ் இலக்கியத்தில் உள்ள அறிவியலையும் அவரால் பேச முடியும்.. இப்போதைக்கு பக்தியை பற்றி பேசிவிட்டார்.. அவர் பேசிய மேடை அப்படி..

ஃபாசிஸ்ட்டு
தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமான மனிதர் அவர்.. தமிழ்தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தி கொண்டு வந்துள்ளது.. அந்த தமிழை உங்களுக்கு ஏற்றபடி மாதிரி தூக்கி தலையில் வைத்து வைத்து கொண்டால், அதை எப்படி அனைவராலும் ஏற்க முடியும்? தமிழுக்கென்று ஒரு மரியாதை உள்ளது.. அதை எப்படி ஒரு சின்ன டப்பாவுக்குள் சுருக்க முடியும்? தமிழையே, பாசிஸ்ட்டுக்கு உள்ளாக்கினால், அது அதிகப்பிரசங்கித்தனம் தானே? நிறைய இலக்கியம் படித்தவர்களே இப்படி செய்தால் எப்படி? தமிழில் எவ்வளவு அறிவியல் பொதிந்துள்ளது என்பது அறிவியல் படித்த பாரதி பாஸ்கருக்கு தெரியாதா?

சயின்ஸ் + மேதாவி
பக்தி மட்டும்தான் இருக்கிறது என்று சொன்னால் எப்படி? மனிதருக்கு, ஒரு ஆபத்து வரும்போது, நெருக்கடி வரும்போது, போராட்டம் ஏற்படும்போது, சாமி தேவைப்படுகிறது, அதனால் கும்பிட்டு கொள்கிறோம்.. ஆனால், சில சமயம் சாமி தேவையில்லை என்றும் நாம் சொல்ல வேண்டி வரும்.. அதற்காக நீ சாமி கும்பிட்டே ஆக வேண்டும் என்று திணிப்பதா? பக்தி இல்லையேல் தமிழ் இலக்கியமே இல்லை என்று நன்கு படித்த, ஒரு அறிவாளி, அதுவும் அறிவியல் படித்தவரே சொல்வதைதான் நம்மால் ஏற்க முடியவில்லை.." என்றார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்?












Click it and Unblock the Notifications