ஜான் பாண்டியன் "திமுக"ன்னதுமே.. அரண்ட பாஜக, அதிமுக.. ஹப்பாடா, இப்ப செம மூவ்.. இதென்ன லிஸ்ட்ல இல்லயே?
சென்னை: சென்னை: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? என்ற ஆர்வம் எகிறி கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம், தேர்தலுக்காக உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்திருக்கிறார் ஜான் பாண்டியன்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அன்று அறிவித்ததுமே, கூட்டணி கட்சிகளுக்கு தலையே சுற்றிவிட்டது. இதனால், தமாகா தலைவர் வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, உட்பட யாருமே இந்த கூட்டணி முறிவை ஏற்கவில்லையாம்..

அதனால், விரைவில் விரிசலை தளர்த்தி, இரு கட்சிகளையும் இணைக்க முயன்றனர். அந்தவகையில், ஜான்பாண்டியனும் இதே முயற்சியை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகின.
கூட்டணி: கூட்டணி முறிவு அறிவிப்பு அந்த நேரத்தில், ஒரு சேனலுக்கு ஜான் பாண்டியன் பேட்டி ஒன்றை தந்திருந்தார். அதில், "அதிமுக - பாஜக இணைய வாய்ப்பு உள்ளதாகவே நம்புகிறோம்..பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்துவிட்டால், அமோக வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பதால், கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செய்த சதியாக இது இருக்குமோ என்ற ஐயப்பாடு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.
ஏனென்றால், அன்று, அண்ணன் வைகோ வைத்து, அணியை உருவாக்கி, அதிமுகவை வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.. அதுபோலவே, பாஜக + அதிமுக இணைந்துவிட்டால், அமோக வெற்றி பெற்றுவிடும் என்று திமுக நினைக்கிறது. எனினும், அதிமுகவா? பாஜகவா? என்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி நாங்கள் முடிவெடுப்போம்..
போட்டி: தேவேந்திர குல வேளாளர் தொடர்பான கோரிக்கைகளை, எங்களுக்கு, பாஜக மட்டுமே நிறைவேற்றி தந்தது என்று சொல்ல முடியாது. அதிமுகவுக்கும் இதில் பங்கு உள்ளது.. அண்ணன் எடப்பாடியின் பங்கு நிறையவே உள்ளது.. அதனால், அதிமுக - பாஜக இருவருமே இணைந்துதான் எங்களுக்கு அரசாணையை பெற்று தந்தார்கள்.
3வது அணி என்பதைவிட, 2வது அணியே இருக்கட்டுமே.. நல்லதே நடக்கும் என்று நினைப்போமே.. அப்படியும் 3வது அணி அமைந்துவிட்டால், செயற்குழுவை கூட்டி முடிவெடுப்போம். அதிமுகவில் இருப்பதா? பாஜகவுடன் இணைவதா? என்று அதற்கு பிறகு முடிவெடுப்போம்" என்று கூறியிருந்தார்.
ஜான் பாண்டியன்: ஜான் பாண்டியன் இப்படி சொல்லி 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், பாஜக - அதிமுக கூட்டணி இணையவில்லை... இரு தரப்பையும் சமாதானப்படுத்த இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் கை கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. தேர்தலும் நெருங்கிவிட்டது. இதனால் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஜான் பாண்டியனுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், சென்னையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டத்தை கூட்டியிருந்தார் ஜான் பாண்டியன்.. அவரது மகளும், மகளிரணித் தலைவருமான வினோலின் நிவேதா பாண்டியன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
நிர்வாகிகள்: இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் வாக்கெடுப்பு நடந்தது. இதன்படி தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் யாருடன் கூட்டணி? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பதிவு செய்து வாக்குப் பெட்டியில் போட்டனர். அதாவது தேர்தலுக்காக, உட்கட்சி தேர்தலை நடத்தியிருக்கிறார் ஜான் பாண்டியன்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜான் பாண்டியன் சொல்லும்போது, "வாக்குச்சீட்டு வாயிலாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளோம். இதனை பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது... அனைத்து கட்சி சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. சாதகமான 5 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளோம்.
போட்டி: எத்தனை தொகுதி என்பதை பேச்சு வார்த்தையின்போது தெரிவிப்போம். அங்கீகாரம் கொடுக்கும் அரசியல் கட்சியுடன் இணைந்து பயணிப்போம்.. சூழ்நிலையை பொருத்து நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
சூழ்நிலையை பொறுத்து நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஜான்பாண்டியன் சொல்லியிருப்பதால், அநேகமாக, ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா போட்டியிடலாம் என்கிறார்கள். தன்னுடைய அப்பாவும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் வாய்ப்பு தந்தால், போட்டியிட தயாராக இருப்பதாக ஏற்கனவே ஒரு டிவி சேனலில் சொல்லியிருக்கிறார் வினோலின்.
கோரிக்கைகள்: ஆனால், யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. ஜிகே வாசனை போல, ஜான் பாண்டியனும் குழம்பியே உள்ளார்.. தேவேந்திர குல வேளாளர் தொடர்பான கோரிக்கைகளை, அதிமுகவும், பாஜகவும் சேர்ந்தே நிறைவேற்றி தந்திருப்பதால், இதில் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்? என்ற ஆர்வம் எகிறி வருகிறது.
ஆனால், அதிமுக, பாஜக எதுவாக இருந்தாலும், இரட்டை இலை, தாமரை சின்னத்திலேயே ஜான்பாண்டியன் போட்டியிடக்கூடும் என்கிறார்கள். அந்தவகையில், அதிமுக, பாஜக இரு கட்சிகளுமே ஜான் பாண்டியனை கூட்டணிக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றன.
ஒருமுறை ஜான் பாண்டியனிடம் செய்தியாளர்கள், "திமுக காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பில்லை தானே" என்று கேட்டார்கள்.. அதற்கு ஜான் பாண்டியன், "அதெப்படி வாய்ப்பில்லை என்று நீங்கள் முடிவெடுக்கலாம்.. அதை நாங்கள்தானே முடிவெடுக்கணும்? ஏன் திமுக கூட்டணியில் சேர முடியாது? அப்படி சொல்ல முடியாது.. அரசியலில் தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம், பகையும் இல்லை, நண்பரும் இல்லை. சூழ்நிலையை பொறுத்தது. அரசியல் என்பது சூழ்நிலைதான் என்றார்.
குழப்பம்: ஜான் பாண்டியன் இப்படி சொன்னதுமே, அதிமுக, பாஜக கட்சிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது.. ஆனால், தற்சமயம், அதிமுக - பாஜக இந்த 2 கட்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு ஜான் பாண்டியன் வந்திருக்கிறார்.. இது ஒருவகையில், இரு கட்சிகளுக்கும் நிம்மதியை தந்துள்ளது என்றாலும், ஆனால், யாரை தேர்ந்தெடுக்க போகிறார் என்றுதான் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications