அமித்ஷாவை விடுங்க.. எடப்பாடி வீட்டில் 2 பேர்.. சுயநல பேர்வழி.. ரகசியத்தை போட்டுடைத்த வைத்திலிங்கம்
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி தந்துள்ளார்
சென்னை: அமமுகவுடன் கூட்டணி வைத்து, தேர்தலை சந்திக்கலாம் என்று கடந்த 2021 தேர்தலுக்கு முன்பேயே நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம், அவர்தான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்..!
அதிமுக பொதுக்குழு குறித்து தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது...
இதன் மூலம் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் நடத்தப்பட்ட பொதுக் குழு செல்லுபடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை தரும் அளவுக்கு நீதிமன்ற உத்தரவுகள் வந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஹைகோர்ட் உத்தரவு பெருத்த நம்பிக்கையை அவருக்கு தந்துள்ளது.

வைத்திலிங்கம்
ஜூலை 11ம் தேதி பொதுக் குழுவில் நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. இப்போது நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியிருப்பதால், விரைவில் அந்தத் தேர்தலை நடத்த எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முயலக்கூடும். இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான வைத்திலிங்கம், பிரபல தனியார் சேனல் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சில முக்கிய விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.. அதன் சுருக்கம் இதுதான்:

இலை + தலை
எடப்பாடி தவிர அனைவரும் சசிகலாவை ஏற்றுக் கொண்டனர்.. இனி நாங்கள் எங்கள் கோரிக்கையை உச்சநீதிமன்றம் சென்று நியாயத்தை கேட்க போகிறோம்.. இருவரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்டுவார்கள் என்பது சாத்தியம் கிடையாது.. இருவரும் வேறு வேறு நிலைப்பாட்டில் உள்ளதால், கட்சி நிரந்தரமாக முடங்கிவிடும் என்று ஹைகோர்ட் சொல்கிறது.. ஆனால், அப்படி கட்சி நிரந்தரமாக முடங்கிவிடாது.. எத்தனையா பேர் இந்த கட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தார்கள்.. ஆனால் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை..

ப்ரூப் பண்ணுவோம்
இப்போது எடப்பாடியும் அப்படி நினைக்கிறார்.. அது எந்த காலத்திலும் நடக்காது.. இந்த கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும்.. ஆனால், இதற்கு எடப்பாடி தரப்பு ஒப்புக்கொள்ளாவிட்டால், வரப்போகும் முக்கிய வழக்குகளில், எடப்பாடி பக்கம் பொய்யாக இருப்பவர்கள் யார் என்பது நிரூபிக்கப்படும்.. அன்று 23-ம்தேதி நடந்த பொதுக்குழுவுக்கு வந்தவர்கள் பெரும்பாலானோர் அதாவது 30 சதவீதம் பேர் பொதுக்குழு உறுப்பினர்களே கிடையாது.. இதையும் நாங்கள் நிரூபிப்போம்.. நாங்களும் பொதுக்குழு கூட்டுவோம்.. ஆனா, வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது..

துரைமுருகன்
சசிகலாவிடம் அன்று தவழ்ந்து போய் முதல்வர் ஆனாரே, இன்று அவரையே எதிர்க்கவில்லையா? ஆனால், திமுக அரசு மறைமுகமாக எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக சொல்கிறார்கள்.. எதை வைத்து இப்படி சொல்கிறார்கள்? சட்டமன்றத்தில் படத்திறப்பு விழாஅன்று, கலைஞரை பற்றி அரை மணி நேரம் புகழ்ந்து பேசினார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. அப்படித்தானே ஓஎஸ்ஸும் பேசினார்.. மறைந்து போனவர்களை பற்றி புகழ்ந்து பேசுவது தவறு கிடையாது.. ஆனால், இதுவே கேபி முனுசாமி, துரைமுருகனை பற்றி வானளாவ புகழ்ந்தாரே.. அதை பற்றி நான் பேசட்டுமா?

கருணாநிதி
அண்ணா சொன்னது போலத்தான், மாற்றான் தோட்டத்துக்கும் மல்லிகை உண்டு.. ஒவ்வொரு காலகட்டத்திலும் திராவிட இயக்கங்களின் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.. இறுதியில், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொல்லிவிட்ட பிறகு, எதிரிகளாக இருந்தாலும் செய்வது நன்மையாக இருந்தால், அதை வரவேற்க வேண்டியதுதான்.. ஒருவேளை, அவைகள் ஏற்றுக் கொள்ள முடியாததை என்றால், கடுமையாக எதிர்க்க வேண்டியதுதான்..

நத்தம் + திண்டுக்கல்
அமமுகவை கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று 2021 தேர்தலுக்கு முன்பே நாங்கள் கிட்டத்தட்ட 10 பேர் சேர்ந்து வலியுறுத்தினோம்.. ஓபிஎஸ் வீட்டில்தான் இதை பற்றி அன்று பேசினோம்.. அப்போது நான், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி இப்படி எல்லாருமே அன்னைக்கு இருந்தாங்க.. இவர்கள் எல்லாருமே சசிகலா, தினகரனை இணைக்க சம்மதம் என்றுதான் சொன்னார்கள்.. "எங்களுக்கு ஒன்னுமில்ல, ஆனால், முதல்வர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை, அவரிடம் போய் பேசுங்க.. அவர் ஒப்புக்கொண்டால் எங்களுக்கும் சம்மதம்" என்று சொன்னார்கள்..

விஜயகாந்த்
இதற்கு பிறகு, நத்தம் விஸ்வநாதனும், நானும் 2 பேரும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று இதை பற்றி பேசினோம்.. அப்போது அவர் ஒப்புக்கொள்ளவில்லை.. எங்களுக்கு அன்றுதான் புரிந்தது, இவருக்கு இயக்கத்தை பற்றி கவலையில்லை, மாறாக, இந்த இயக்கத்தை கைப்பற்ற வேண்டும் என்று கவலைப்படுகிறார் என்று எண்ணமே அன்றுதான் எனக்கு தோன்றியது.. எவ்வளேவோ எடுத்து சொல்றோம், அவங்களை சேர்த்துக்குங்க, தேமுதிகவையும் கண்டிப்பா சேர்த்துக்குங்க, அப்படி சேர்த்து கொண்டால் நமது ஆட்சிதான்,.. நம்ம இரட்டை இலையில் நின்று தேர்தலை சந்திக்கவும், அமமுகவும் ஒப்புக்கொண்டுவிட்டனர்.. இதனால், 2, 3 சதவீத வாக்குகளும் அதிகமாக வரும் என்று எடுத்து சொன்னோம்..

அமித்ஷா
அமித்ஷா சென்னை வந்தபோதே இதை பற்றி பேசியதாக கூட செய்திகள் வந்தன.. ஆனால், நானும், நத்தம் விஸ்வநாதன் 2 பேரும் பலமுறை இதை பற்றி சொல்லியும் எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை.. இன்றும் அதே பிடிவாதம்தான்.. கட்சி நலனை பற்றி சிந்தித்தால், அதிமுக சிறப்பாக இருக்கும்.. ஆனால், தன் நலத்தை பற்றி மட்டுமே எடப்பாடி பழனிசாமி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.. கோர்ட் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.. ஆனால், இறுதியான தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் வரை இழுபறியாகத்தான் போகும்.. இன்னும் 6 மாத காலத்துக்கு இப்படித்தான் இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications