மழுப்பலான வாதம் வைத்த புஸ்ஸி ஆனந்த்.. விஜய்க்கு தெரியுமா? நீதிபதியின் ஒரே கேள்வி.. ஸ்டன் ஆன தவெக
சென்னை: சனிக்கிழமை சம்பள நாள். அதனால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என கணித்தோம் என்று தவெக தரப்பு மழுப்பலான வாதத்தை கோர்ட்டில் வைத்து உள்ளது.இதையடுத்து இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கும் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது.
கரூர் 41 பேர் பலியான வழக்கில் தவெக மதியழகன், பவுன்ராஜ் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் இன்று வாதம் வைத்தனர். ஏற்கனவே கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக தரப்பு வைத்த மழுப்பலான வாதம்
கரூர் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கு கழகம் சார்பாக வைக்கப்பட்ட வாதத்தில், அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதிகளை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்ட விரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை. நோயாளிகள் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே வந்தது.
சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று கணித்தோம் . சனிக் கிழமை சம்பள நாள். அதனால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என கணித்தோம் என்று தவெக தரப்பு மழுப்பலான வாதத்தை கோர்ட்டில் வைத்து உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கோர்ட் எழுப்பிய கேள்வி
இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. அதில், அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே? இபிஎஸ்-க்கு வருவது கட்சிக் கூட்டம்; விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.
தமிழக அரசிடம் 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் எப்படி சொன்னார். எதை வைத்து 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று சொன்னீர்கள்? விஜய்க்கு இது தெரியுமா? அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா தெரியாதா? சொல்லுங்க? மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை.
நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்? என கரூர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார்.
தமிழக போலீஸ் வைத்த வாதம்
தமிழக போலீஸ் வைத்த வாதத்தில், விஜய் சரியான நேரத்திற்கு வரவில்லை. கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை. வேகமாக வரச் சொல்லி போலீசார் கூறினார்கள். போலீஸ் கூறியதை மீறி ராங் ரூட்டில் சென்றார்கள் என்று கரூர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்து உள்ளது.
-
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா












Click it and Unblock the Notifications