சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சீனே மாறிடுச்சே".. ஒருத்தருமே கிட்ட இல்லயாம்.. தனித்து விடப்பட்டாரா சசி.. காரணமே "அவர்"தான் போலயே

தஞ்சையில் தங்கியுள்ள சசிகலாவை அமமுக நிர்வாகிகள் யாருமே சந்தித்து பேசாமல் உள்ளனராம்

Google Oneindia Tamil News

சென்னை: இடைத்தேர்தல் பரபரப்பு, இரட்டை இலை சின்னம் பரபரப்பு என அரசியல் களமே தகித்து கிடக்கும் சூழலில், சசிகலா குறித்த செய்தி ஒன்று கசிந்து வருகிறது.. இதை அமமுக தரப்பும் உற்று கவனித்து வருகிறது.

அதிமுக விவகாரங்கள் உச்சத்துக்கு போய்விட்ட நிலையில், இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.. நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையே இரு தரப்பும் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமியை தவிர, கோர்ட் முடிவைதான் பாஜகவும் எதிர்நோக்கி உள்ளது.. ஆனால், இதற்கு நடுவில் சசிகலா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல! ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக சசிகலா! ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல! ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக சசிகலா!

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார், அறிக்கைகளை விடுகிறாரே தவிர, கட்சி ரீதியான என்ன முடிவில் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால், கடந்த மாதம் நமக்கு பிரத்யேகமாக ஒரு செய்தி கிடைத்தது.. முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் விகே சசிகலா என்று சொன்னார்கள்.. எப்போதுமே வாரத்துக்கு இருமுறை சசிகலாவிடம் பேசும் ஓபிஎஸ், அதை நிறுத்திக் கொண்டுவிட்டாராம்.. அதேபோல, வைத்தியலிங்கம் உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களும் சசிகலாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டார்களாம்.

 25 MLAs

25 MLAs

இதனால், சசிகலா தனிமைப்படுத்தப்பட்ட சூழலில், ஒரே ஒரு ஆறுதல், அவரது சகோதரர் திவாகரன் தான் என்கிறார்கள்.. சில நாட்களுக் கமுன்பு, சசிகலா பக்கம் சில அதிமுக புள்ளிகள் தாவ போவதாக செய்திகள் கிளம்பின.. அதாவது, எடப்பாடி-ஓபிஎஸ் மோதலால் அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ என்கிற கவலை அடைந்த கிட்டத்தட்ட 25 எம்எல்ஏக்கள், சசிகலா பக்கம் வரலாமா என யோசித்தார்களாம்.. ஆனால், அந்த 25 பேரும், பொருளாதாரம் சார்ந்த சில எதிர்பார்ப்புகளை சசிகலாவிடம் எதிர்பார்க்கும் சூழலில், பணம் கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க முடியாத சூழலில் சசிகலா உள்ளதாக கூறப்பட்டது. அதற்கு பிறகு இந்த தகவல் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தடபுடல்

தடபுடல்

இப்போது இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.. சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இப்போதைக்கு தஞ்சாவூரில் தங்கி இருக்கிறார் சசிகலா... ஆனால், அங்கே அவரை சந்திக்கவோ, அவரது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ அமமுக நிர்வாகிகள் யாரும் செல்லவில்லையாம்.. முன்பெல்லாம் சசிகலா எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள அமமுக நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து திணற வைத்துவிடுவார்கள்.. ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாகிவிட்டதாம்.

 கண்டுக்கல கண்டுக்கல

கண்டுக்கல கண்டுக்கல

சசிகலா - தினகரன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டு வருவதால், அமமுக தரப்பினர் சசிகலாவை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.. சசிகலா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் யாரும் நிர்வாகிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று ஏற்கனவே தினகரன், தன்னுடைய அமமுக நிர்வாகிகளுககு வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாக சொல்லப்பட்டது.. சமீபத்தில் சசிகலாவை சந்தித்து தினகரன் பேசியிருந்தார்.. இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்கள் தினகரனிடமே கேட்டிருந்தனர்.

 வாயே வலிக்குது

வாயே வலிக்குது

அதற்கு தினகரன், "சித்தியுடன் எனக்கு பிரச்சனைன்னு நீங்களே காத்துல செய்திகளை எழுதினால் எப்படி? அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா? நான் பலமுறை சொல்லிட்டேன், எங்களுக்குள் பிரச்சனை இருக்கா இல்லையா? என்பதை காலம் பதில் சொல்லும்.. ஏன் என்றால், பலமுறை இதுக்கு நான் பதில் சொல்லி, என் வாயே வலிக்குது.. நான் அவங்களை சந்திப்பது என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி எல்லாம் கிடையாது.. அவங்க என் அம்மாவுடைய தங்கை, என்னுடைய சித்தி, என் மனைவிக்கு அத்தை.. அதனால எப்பவுமே சந்திக்கதானே செய்வோம்? தேவை ஏற்படும்போதெல்லாம் அவங்களை சந்திப்பேன்.. அப்படித்தான் சமீபத்திலும் சந்தித்துவிட்டு வந்தேன்" என்று யதார்த்தமாக கூறியிருந்தார்.

 சைலண்ட் ஆர்டர்

சைலண்ட் ஆர்டர்

எனினும், சசிகலா - அமமுக இடையே ஏற்பட்டிருந்த அந்த அதிருப்தி சூழல் இன்னமும் மாறவில்லை என்றே தெரிகிறது.. அதற்கேற்றபடி, சசிகலாவும் தொடர்ந்து அமமுகவை பற்றி கவலைப்படாமல் அதிமுகவுக்கே உரிமைக் கொண்டாடி வருவதும், தினகரன் தரப்பை கவனிக்கவே செய்து வருகிறது.. அதனால்தான், சசிகலாவை வரவேற்கவோ, சந்திக்கவோ வேண்டாம் என தினகரன் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவு மீண்டும் போடப்பட்டுள்ளதாம்.. இதனால் தான் இப்போதெல்லாம் அமமுக நிர்வாகிகள் சின்னம்மாவை புறக்கணிக்கிறார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..!!

English summary
Didn't AMMK Executives meet VK Sasikala and What was the instruction given by TTV Dinakaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X