சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கலையா?.. இந்த நம்பரில் புகார் சொல்லுங்க..வீடு தேடி வரும்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால், அந்தந்த மாவட்டத்தில் பரிசு தொகுப்பு தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கவனித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் டோக்கன் வராதவர்கள் புகார் தெரிவிக்க சிறப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

Tamil Nadu government announced Not getting Pongal gift token?..complain on this number

பரிசு தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம், அளவு உள்ளிட்டவற்றை அரசு வரன்முறை செய்துள்ளது. மேலும் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன்கள் மாவட்ட வாரியாக நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் பல பொருட்கள் கெட்டுப்போனதாகவும், தரமற்ற முறையிலும் இருந்ததாக பல்வேறு மாவட்டங்களிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இந்த முறை வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால், அந்தந்த மாவட்டத்தில் பரிசு தொகுப்பு தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கவனித்து வருகின்றனர்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் தற்போது வரை யார், யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்கள் புகார் தெரிவிக்க புகார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி செங்கல்பட்டு வட்டத்தில் உள்ளவர்கள் 8637616667 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மதுராந்தகம் புகார் எண் .8248212994, செய்யூர் புகார் எண். 9597373617, திருக்கழுக்குன்றம் புகார் எண். 9940624877, திருப்போரூர் புகார் எண். 9944336339,வண்டலுர் புகார் எண். 7708931572 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வீடு தேடி வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரேசன் கடைகளில் டோக்கன்களை நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has announced that those who have not received the Pongal gift package token can file a complaint. The Tamil Nadu government has already announced that respective District Collectors will be responsible for Pongal gift packages. Thus, the District Collectors are looking after the work related to gift collection in their respective districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X