சீமான் கட்சியில் ஆர்எஸ்எஸ் ஊடுருவல்- 'தமிழர்' சர்ட்டிஃபிகேட் தர நீங்க யார்? இயக்குநர் அமீர் தாக்கு
சென்னை: சீமானின் நாம் தமிழர் கட்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊடுருவியிருக்கின்றனர்; இதற்கு ஆதாரம் என்னிடம் இருப்பதால் பொதுவெளியில் சொல்கிறேன் என்று இயக்குநர் அமீர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இஸ்லாமியர்களை தமிழர் இல்லை என்று சான்றிதழ் தர நீங்கள் யார்? என்றும் இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான், நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பே அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தவர் இயக்குநர் அமீர். ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக சீமானுடன் சிறைவாசம் அனுபவித்தார் அமீர்.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட பின்னரும் அதன் ஆதரவாளராக இருந்த அமீர், அண்மைக்காலமாக சீமானிடம் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் சில பேட்டிகளில் இந்துத்துவாவின் குரலாக சீமான் பேசி வருவது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

பாஜகவுக்கு ஆதரவாக தெரிந்து பேசும் சீமான்
இது தொடர்பாக ஏ.பி.பி.நாடு ஊடகத்துக்கு இயக்குநர் அமீர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் பாஜகவின் பி டீம் என்கின்றனர். யார்தான் யாருக்கு பி டீம் என்பது தெரியவில்லை. பொதுவாக பாஜக, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் பெரியாரை நிராகரிக்கின்றனர்; திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவை டார்கெட் செய்கின்றனர். இந்த விஷயங்களை பாஜகவினரால் வெளிப்படையாக பேச முடியாது. ஏனெனில் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. ஆனால் இளைஞர்களை தம் பக்கம் ஈர்க்கும் பேச்சாற்றல் கொண்ட சீமான், இதே கருத்துகளைப் பேசுகிறார். இது பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்குதான் உதவும் என்று தெரிந்தேதான் சீமான் பேசுகிறார். அதனால்தான் 10 ஆண்டுகளாக சீமானை விமர்சிக்காமல் இருந்த வைகோ, கொளத்தூர் மணி முதல் இன்று திருமாவளவன் வரை, அவரது பாதை ஆபத்தானது, இந்துத்துவவாதிகளுக்கு உதவக் கூடியது என எச்சரிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். ஊருவல்
நாம் தமிழர் கட்சி என்ற போர்வையில் உறுப்பினராக இருந்து கொண்டு சமூக வெளியில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் செயல்பட்டும் வருகின்றனர். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால்தான் நான் பகிரங்கமாக பொதுவெளியில் இதனை தெரிவிக்கிறேன். இது தொடர்பாக சீமானிடம் பேசினால், என்னை பார்த்தா அப்படியா தெரியுது? தப்பா புரிஞ்சுகிட்டு பேசினா என்ன செய்யுறது என்றுதான் சொல்வார். சீமானின் பேச்சு ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை வளர்த்துவிடக் கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது.
Recommended Video

சந்தேகத்துடன் பார்ப்பதா?
நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில் சிறுபான்மையினரை சந்தேகக் கண்டு கொண்டு பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த கொள்கை ஆவணத்தை பொதுவெளியில் நாம் தமிழர் கட்சியினர் பேசுவார்களா? என்பது தெரியவில்லை. அப்படி கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து உருவாக்குகிற தமிழ்த் தேசியம் யாருக்கும் தேவையில்லை. இதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மை அஜெண்டா எனில் இது மனிதநேயத்துக்கு மாறானது. இதனை ஏற்கவே முடியாது. எதிர்க்கத்தான் வேண்டும்.

மதம் எப்போது உருவானது?
சீமானின் பேச்சில் இருந்தே எடுத்துக் கொண்டால் முதலில் தோன்றியது மதமா? மனிதனா? மனிதன்தான். அப்படியானால் மனிதன் தோன்றும் போதே சைவ மதமும் தோன்றிவிட்டதா? மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே அத்தனை மதங்களும் வந்தன. அப்படி இருக்கும் போது சைவத்துக்கு மட்டுமே உரிமை கொண்டாடுவேன் என சீமான் பேசுவது ஏற்புடையது அல்ல. கீழடியில் எந்த ஒரு மதத்துக்குமான ஆதாரம் எதுவும் இல்லை. எனது முப்பாட்டன்களிலேயே முருகன் மட்டும்தான் வணக்கத்துக்குரியவரா? முருகனுக்கு முன்னும் பின்னும் சிறப்பானவர்கள் என யாரும் இல்லையா?

சர்ட்டிஃபிகேட் தர நீங்க யார்?
இஸ்லாமியர் தமிழரே இல்லை என்று சர்ட்டிபிகேட் கொடுக்க இவர்கள் யார்? நான் என் மொழியை நேசிக்கிறேன்.. என் இனத்தை நேசிக்கிறேன். உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை ஆராதிக்கிறேன்.... போற்றுகிறேன். அதற்கான நான் மற்றவர்களை சிறுமையாகப் பார்க்க வேண்டுமா? தாய் மதத்துக்கு திரும்புங்க என்று பேசுவது எல்லாம் அறிவீனம். பிற மதத்தில் இருந்து சீமான் சொல்வது போல தாய் மதம் திரும்பினால் சைவத்துக்கு மாற வேண்டுமா? மாலியம்- வைணவத்துக்கு மாற வேண்டுமா? என்பது நியாயமான ஒரு கேள்விதான். இந்துத்துவவாதிகள் கர்வாப்ஸ் என்று சொன்னபோதே இந்த கேள்வியை நாம் முன்வித்தோம். ஆர்.எஸ்.எஸ்- நாம் தமிழர் இடையேயான ஒற்றுமைகள் பல இருப்பதை அவர்களே கூட மறுக்க முடியாது. இவ்வாறு அமீர் கூறினார்.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications