கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சந்தேகம் எழுப்பும் பா.ரஞ்சித்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது மறைந்து கொண்டிருக்கும் உண்மை குற்றவாளிகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது தொடர்பான தமிழக அரசு வழக்கறிஞர் குழுவில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் சேர்க்கப்பட வேண்டும் என்றும் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் ஆகியோர் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய கட்சி
அதேபோல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அமைக்கப்பட்ட 9 அடி சிலை திறக்கப்பட்டது. பின்னர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார். இதன்பின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு
இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் நிறைய கேள்விகள் உள்ளது. இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பது தெரியவில்லை. விசாரணைக்குட்பட்டு சில குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள். ஆனால் பின்னால் இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது.
உண்மை குற்றவாளிகளா?
இதனால் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்ற உண்மைத்தன்மையை ஆராய வேண்டி இருக்கிறது. வழக்கு மன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுவுடன் சேர்த்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர்கள் சேர்த்து கொள்ளப்பட வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. குற்றவாளிகளுக்கு பின் பெரிய சூழ்ச்சி இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
கோரிக்கை
அதனால் விசாரணையில் அனைத்து விவகாரங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பாக கூட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதுவெறும் முன்விரோத கொலையாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இந்த சம்பவத்திற்கு பின்னுள்ள உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அம்பை எய்தது யார்?
மறைமுகமாக இருக்கும் குற்றவாளிகளை வெளியில் கொண்டு வர வேண்டும். அதனை பொற்கொடி நிச்சயம் வெளியில் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அம்பேத்கரின் சட்டப்பாதையில் பயணித்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மீண்டும் விவாதமாகி இருக்கிறது.
-
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications